வாகைத்துறைப் பாடாண் பாட்டு 


35. வென்றிச் சிறப்பு  

புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே,
உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!
இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து,
அளகுடைச் சேவல் கிளை புகா ஆர,
5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை,
அந்தி மாலை விசும்பு கண்டன்ன
செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து,
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயினானே.
10

துறை:வாகைத்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:அது
தூக்கு:செந்தூக்கு
பெயர்:மெய் ஆடு பறந்தலை
 
உரை