| துறை : குரவை நிலை. வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சிறுசெங்குவளை. 1 - 12. கொடி நுடங்கு ............ கேட்டிகும். உரை : அருங்கலம் தரீஇயர் - பிற நாடுகளி னின்று அரிய பொருள்களைக் கொண்டு வருதற்காக ; நீர்மிசை நிவக்கும்- கடலின்மேல் மிதந்து செல்லும் ; பெருங்கலி வங்கம் - பெரிய ஆரவாரத்தை யுடைய கப்பல்கள் ; திசை திரிந்தாங்கு - செல்லுந் திசைகளிலே திரிந்து செல்வது போல ; கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து - கொடிகள் அசையும் நிலையை யுடைய போர் யானைகள் செறிந்து திரிதலால் ; வடிமணி நெடுந்தேர் வடித்த வோசையினையுடைய மணிகட்டிய நெடிய தேர்களை ; வேறு புலம் பரப்பி - வேறிடங்களில் பரவிச் செல்வித்து ; மையணிந்து எழுதருமா இரும்பல்தோல் - மழைமேகம் போலக் கருத்தெழும் பெரிய பலவாகிய கேடகங்களுடன் ; எஃகு சுமந்து வேலும் வாளும் ஏந்திக்கொண்டு ; முன் சமத்து - போரின் முன்னணியில் நின்று பொருதலை விரும்பி ; மெய்புதை அரணம் எண்ணாது - மெய்யை மூடும் கவசத்தையும் வேண்டுமென் றெண்ணாமல் விரைந்து ; எழுதரும் வன்கண் ஆடவர்- |