முகப்பு    

 காந்தள் 


15
15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்

யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப
            5

கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல்,
                  10

சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,
அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே:
                      15

கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,
கொடி நிழல் பட்ட பொன்னுடை நியமத்து,
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின்
                   20

வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,
போர் வல் யானைச் சேரலாத!
'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,
உண்டு உரை மாறிய, மழலை நாவின்,
                   25

மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி,
                 30

நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்
மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது
             35

ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,
நெடியோன் அன்ன நல் இசை,
ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே.
                 40

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நிரைய வெள்ளம்


உரை
 
21
Song Not Found

உரை
 
30
30.வென்றிச் சிறப்பு

இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,
மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்
பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை
வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்
அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை,
                    5

தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடற் படப்பை மென்பாலனவும்;
காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட
                     10

மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன் புல வைப்பும்;
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,
அரி கால் அவித்து, பல பூ விழவின்
                          15

தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,
வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்
             20

செழும் பல் வைப்பின்  பழனப் பாலும்;
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்;
                     25

பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,
அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்;
பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து,     
30

கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க,
முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர,
கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து
கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து
அருந் திறல் மரபின் கடவுள் பேணியர்,
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
                35

கருங் கண் பேய்மகள் கை புடையூஉ நடுங்க,
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி,
எறும்பும் மூசா இறும்பூது மரபின்,
கருங் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர;
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழல் கால்,
                    40

பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,
பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்
கடுஞ் சின வேந்தே!  நின் தழங்கு குரல் முரசே.

துறை:பெருஞ்சோற்று நிலை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:புகன்ற ஆயம்  

உரை
 
67
67.கொடைச் சிறப்பு

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்,
கடன் அறி மரபின் கை வல் பாண!
தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை
கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க,
5
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,
அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்
குழூஉச் சிறை எருவை குருதி ஆர,
தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு
10
உரு இல் பேய் மகள் கவலை கவற்ற,
நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று;
நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு
15
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து;
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்,
20
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்
கல் உயர் நேரிப் பொருநன்,
செல்வக் கோமான் பாடினை செலினே.

துறை:
பாணாற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் போழ்க் கண்ணி

உரை
 
81
81.காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி
   வேட்கைச் சிறப்புக் கூறுதல்

உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின்,
வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து,
கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து,
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள,
5
களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப,
அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து,
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்,
மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத்
10
தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும்
முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ,
கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார்,
இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப,
நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி;
15
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி,
கட்டளை வலிப்ப, நின் தானை உதவி,
வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து,
சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த்
20
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி,
காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர்,
கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும்,
சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப்
பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து,
25
மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து,
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள,
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப்
பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து
30
மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள்,
பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்!
முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது,
தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு,
35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக!
விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே!

துறை:முல்லை
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நிழல் விடு கட்டி

உரை
 

    மேல்