16. |
கோடுறழ்ந்
தெடுத்த கொடுங்க ணிஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கற்
றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா வையவி தூக்கிய மதில |
5 |
நல்லெழி
னெடும்புதவு முருக்கிக் கொல்லு
பேன மாகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொன்
மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலிற் காண்குவந் திசினே
|
10 |
ஆறிய
கற்பி னடங்கிய சாயல்
ஊடினு மினிய கூறு மின்னகை
அமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற்
சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள்
பாய லுய்யுமோ தோன்ற றாவின்று |
15 |
திருமணி
பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
புரையோ ருண்கட் டுயிலின்
பாயல்
பாலுங் கொளாலும் வல்லோய் நின் |
20 |
சாயன்
மார்பு நனியலைத் தன்றே. |
இதுவுமது.
பெயர் - துயிலின் பாயல் (18)
(ப
- ரை)
1.
கோடுறழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சி யென்றது மலையுள்ள இடங்களிலே 1அம்மலைதானே
மதிலாகவும் மலையில்லாத
இடங்களிலே மதிலே அரணாகவும் இவ்வாறு மலையொடு மாறாட
எடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதிலென்றவாறு.
உறழவெனத்
திரிக்க. 'கோடுபுரந்தெடுத்த' என்பது பாடமாயின்,
மதிலில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்கவெடுத்தவென்க.
2.
நாடுகண்டன்ன 'கணைதுஞ்சு விலங்கலென்றது நெடுநாட்பட 2அடைமதிற்பட்ட காலத்தே
விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்துவைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்
போன்ற 3அப்புக்கட்டுக்கள் தங்கும் மலைபோன்ற
இடைமதிலென்றவாறு.
விலங்கல்
போறலின் விலங்கலெனப்பட்டது.
நாடுகண்டாலொப்பது அம்மதிலையடைந்தவிடமென்னின்,
அவ்விடவணுமைபற்றி அதன் உவமையை அம்மதில்மேலதாகக்
கூறிற்றெனக் கொள்க.
3.
துஞ்சு மரமென்றது மதில்வாயிலில் தூங்கும்
கணையமரங்களை; இனிக் கழுக்கோலாக நாட்டிய மரமென்பாரும்
உளர்.
4.
ஐயவியென்றது கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே
தூக்கப்படும் துலாமரத்தை; அப்புக்கட்டென்பாரும் உளர். ஈண்டு
மதிலென்றது உண்மதிலை.
கொடுங்கணிஞ்சியையும்
(1) விலங்கலையுமுடைய (2) மதில் (4)
எனக் கூட்டுக.
இனி,
இடையில் விலங்கலென்றதனை மாற்றார் படையை
விலங்குதலையுடையவென்றாக்கி, முன்னின்ற கொடுங்கணிஞ்சியென்ற
தொன்றுமே மதிலதாக, ஐயவி தூக்கிய மதிலென்றதனை
ஆகுபெயரான் ஊர்க்குப் பெயராக்கி, நாடுகண்டன்ன ஊரென
மாறியுரைப்பாரும் உளர்.
13.
4உள்ளலும் உரியளென்றது யான் குறித்த நாளளவும்
ஆற்றியிருக்கவென்ற நின்னேவல் பூண்டு நின்னை
உள்ளாதிருத்தலேயன்றி நீ குறித்த நாளுக்கு மேலே
நீட்டித்தாயாகலின் (9) நின்னை நினைந்து வருந்துதலும்
உரியளென்றவாறு.
14
- 5. தாவின்று திருமணி பொருத திகழ்விடு
பசும்பொனென்றது வலியில்லையானபடியாலே அழகிய மணிகளொடு
பொருத ஒளிவிடுகின்ற பசும்பொனென்றவாறு.
ஈண்டுத்
5தாவென்றது வலி; பொன்னுக்கு வலியாவது
உரனுடைமை. இன்றென்பதனை இன்றாகவெனத் திரித்து
இன்றாகையாலெனக் கொள்க. என்றது ஒளியையுடைய மணிகளொடு
பொரவற்றாம் படி ஓட்டற்ற ஒளியையுடைய பசும்பொனென்றவாறு.
15
- 6. பூண், பசும்பொன் வயிரமொடு உறழ்ந்து
சுடர்வரவெனக் கூட்டி, பூணான பசும்பொன் தன்னிடை அழுத்தின வயிரங்களோடு மாறுபட்டு விளங்கவென
உரைக்க.
18.
புரையோரென்றபன்மையாற் காதன்மகளிர் பலரெனக்
கொள்க.
17
- 8. அகலப் பாயலென இருபெயரொட்டாக்கி, அத்தை
6அல் வழிச்சாரியை என்க. துயிலினிய பாயலென உரைக்க.
அகலத்தை
மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான்
இதற்கு, 'துயிலின் பாயல் என்று பெயராயிற்று.
19.
பாலுங் கொளாலும் வல்லோயென்றது அவ்வகலப்பாயலை
7வேற்றுப்புலத்து வினையில்வழி நின்மகளிர்க்கு நுகரக்கொடுத்தற்கு
நின்னிடத்தினின்றும் பகுத்தலையும், வினையுல்வழி
அம்மகளிர்பால்நின்றும் வாங்கிக் கோடலையும் வல்லோயென்றவாறு.
பாசறைக்கண்
நீ (8) நீடிணையாகலின் நின்னைக்
காணவந்தேன் (9); நின் தேவியாகிய அசைநடை நின்னை
நினைத்தலும் உரியள் (13); ஆனபின்பு அவள் பாயல்வருத்தத்திற்கு
உய்யுமோ (14)? உய்யாளன்றே; தோன்றல், அகலப் (17) பாயல் (18)
பாலும் கொளாலும் வல்லோய், நின் (19) மார்பு மிக அவளை
வருத்திற்றுக்காண் (20); 8நீ அவள்பாற் கடிதெழுகவென வினைமுடிவு
செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ்த்த இன்பச்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.
(கு
- ரை) பாசறைக்கண் தங்கியிருந்த அரசன்பால்
மாதேவியினிடமிருந்து தூது சென்றோன் கூற்றாக அமைந்தது
இச்செய்யுள்.
1
- 4. மதிலின் சிறப்பு.
1.
மலைகளொடு மாறுபடக் கட்டிய வளைந்த
இடங்களையுமுடைய புறமதில். மதிலுக்கு மலை : பதிற்.
62 : 10;
மலைபடு. 92; கலித்.
2: 12; பெருங். 3. 27 : 46.
2.
கணை - அம்பு. விலங்கல் - இடைமதில்; ஆகுபெயர்.
3-4.
துவன்றி - செறிந்து. புனிற்று மகள் - ஈன்ற
அணிமையையுடைய பெண். அவள் வெண்சிறுகடுகை அரைத்துப்
பூசிக்கொள்ளுதல் மரபு. ஐயவி - துலாமரம். வெண்சிறுகடுகை
விலக்க, "புனிற்று மகள் பூணா வையவி" என்றார். இது வெளிப்படை
நிலை. 5-8. களிற்றின் இயல்பு.
4-5.
மதிலவாகிய புதவுகள்; புதவு - கதவு; அவற்றைக்
களிறுகள் கொம்பால் இடித்தன. முருக்கிக் கொல்லுபு - இடித்து
அழித்து.
6.
ஏனமாகிய - பன்றியின் கொம்பைப்போலாகிய; ஏனம் -
ஆகுபெயர்.
7.
பொத்தி - மூண்டு.
9.
நீடினை - குறித்த காலத்தே வாராமல் தாமதித்தாய்.
காண்கு வந்திசின் - நின்னைக் காணவந்தேன்; காண்கு: செய்கென்னும்
வாய்பாட்டு முற்று; வந்திசின் என்னும் முற்றோடு முடிந்தது.
10-14.
சேரன்மாதேவியின் நிலை.
10.
ஆறிய கற்பின் - அறக்கற்பினையுடைய. இதனை அடங்கிய
கற்பென்றுங் கூறுவர் (குறுந். 338 : 7).
ஆறிய கற்பு : பதிற். 90 : 49;
சிலப். பதி. 38 - 54, அடியார்.
அடங்கிய சாயல் - அடங்கி நின்ற
மென்மையை உடைய. இவ்வடி, 'நீடினையாயினும் பெருந்தேவி தன்
கற்பினாலும், அடக்கத்தினாலும் பிரிவுத் துன்பத்தை ஆற்றி நின்றாள்'
என்னும் குறிப்புடையது.
12.
அமிர்தென்றது எயிற்றில் ஊறிய நீரை (குறுந்.
14 : 1 - 2,
குறிப்புரை). துவர்வாய் - செவ்வாய். அமர்த்த நோக்கின் - விரும்பிய
பார்வையையுடைய; அமர்த்த - மாறுபட்ட எனலுமாம் (குறள்.
1083
- 4, பரிமேல்)
13.
அசைநடை - தளர்ந்த நடையையுடையவள்.
11-3.
இனிய கூறுதல் முதலியன பெருந்தேவியின் ஆறிய
கற்புக்கு அடையாளங்கள்.
14.
பாயல் உய்யுமோ- படுக்கையின்கண் படும்
வருத்தத்தினின்றும் தப்புவாளோ. பின்னர்க்கூறும் துயிலின்
பாயலாகிய அகலத்தையே விரும்புபவளாதலின் பாயல்
உய்யாளாயினாள். தோன்றல்: விளி.
15.
பொருத - நிறத்தால் மாறுபட்டுத் தோன்றிய. திகழ் - ஒளி;
ஆகுபெயர்.
16.
சுடர்வர - விளங்க.
15. எழுமுடி என்றது
ஏழு அரசர்களை வென்றுகொண்ட ஏழு
முடிகளாற் செய்த ஆரத்தை (பதிற். 14 :
11, குறிப்புரை). ஞெமர்தல்
- பரத்தல்.
18.
உயர்ந்த மகளிர் மையுண்ட கண்கள் துயிலுவதற்கு
இனிதாகிய படுக்கை.
17-8.
சேரனது மார்பையே பாயலென்றார்; தலைவியர் தலைவர்
மார்பில் துயிலுதல் இயல்பு (நற். 20 :
2, 171 : 11; ஐங். 14 : 3 - 4,
205 : 4 - 5)
19.
பாலுங் கொளாலும் - பகுத்து அளித்தலையும் கொடாது
வாங்கிக் கொள்ளுதலையும்.
20.
சாயல் - மென்மை. நனி அலைத்தன்று - அண்மையில்
இல்லாமையின் மிக வருத்தாநின்றது. (6)
1மலை
இயற்கையரணாகவும், மதில் செயற்கையரணாகவும்
பயன்பட்டன; "மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடு முடைய
தரண்" (குறள். 742)
என்பதையும் அதன் உரையையும் பார்க்க.
2அடைமதிற்பட்ட
காலம் - பகைவர் முற்றுகையிட்டமையால் மதில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் சமயம்
3அப்புக்கட்டு
- அம்புக்கட்டு.
4உம்மை
இறந்தது தழீஇய எச்சஉம்மை.
5தா
- கேடு எனலுமாம்.
6அல்வழிச்சாரியை
- வேண்டாவழிச்சாரியை.
7வேற்றுப்
புலத்து வினை - பகைவர் நாட்டிற் சென்று செய்யும்
போர்.
8இக்கருத்து
குறிப்பாற் கூறப்பட்டது.
|