44. |
நிலம்புடைப்
பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ
வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற
அரிய வென்னா தோம்பாது வீசிக் |
5 |
கலஞ்செலச்
சுரத்த லல்லது கனவினும்
களைகென வறியாக் கசடி னெஞ்சத்
தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர்
காணி லியரோநிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை |
10 |
நுண்கொடி
யுழிஞை வெல்போ ரறுகை
சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு |
15 |
நெடுமொழி
பணித்தவன் வேம்புமுத றடிந்து
முரசு செய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றுங் குராலம் பறந்தலை |
20 |
முரசுடைத்
தாயத் தரசுபல வோட்டித்
துளங்குநீர் வியலக மாண்டினிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே. |
துறை
- செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நோய்தபு நோன்றொடை (9)
(ப - ரை)
ஆர்ப்பொடு
(1) அமர்கடந்து (3) எனக் கூட்டுக.
5. கலமென்றது
தான் அணிந்த ஆபரணங்களை.
8. நிற்புகழ்ந்த
யாக்கையென்றது நின்னை எல்லா வீரரும்
சொல்லிப் புகழ்தற்குக் காரணமாகிய யாக்கையென்றவாறு.
யாக்கையாகிய
(8) நோய்தபு நோன்றொடை (9) என்க.
யாக்கையை இங்ஙனம்
சிறப்பித்துக் கூறினமையான் இதற்கு.
'நோய்தபு நோன்றொடை' என்று பெயராயிற்று.
10. அறுகையென்பான்
மோகூர்மன்னனுக்குப் பகையாய்ச்
சேரனுக்கு நட்பாயிருப்பானோர் குறுநிலமன்னன்.
11. சேணனாயினும்
கேளென மொழிந்தென்றது அக்கோ நீ
செய்கின்ற வலிக்கு உதவிசெய்தற்குச் சேயனாயினும் எனக்கு
அவன்தான் நட்பெனச் சொல்லி யென்றவாறு.
12. களையாப்
பூசல் - ஒருவரால் மாற்றவொண்ணாத வருத்தம்.
13. அரண்கள்
1தா உறீஇயென்றது மாற்றார் அரண்களை
அழித்தற் றொழிலைத் தன்பாலே உறுவித்தென்றவாறு.
16. முரசுசெய
2முரச்சியென்றது அவ்வேம்பினை முரசாகச்
செய்யும்படி
முற்றுவித்தென்றவாறு.
முற்றுவித்தலாவது ஒழுகையேற்றலாம்படி
துண்டங்களாகத் தறிப்பித்தல். களிறென்றது மோகூர்மன்னன்
களிற்றினை. களிறுபலபூட்டியென்றது அவனேறும் யானைகளை
அவனை அவமதித்துச் 3சாட்டிற்குக் 4கடாவோபாதியாகப்
பூட்டியென்றவாறு.
பூட்டியென்றதற்கு,
"வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர்,
பல்லிருங் 5கூந்தன் முரற்சியாற், குஞ்சர வொழுகை பூட்டி" என
இதன் பதிகத்து வந்தமையால், அம்மகளிர் கூந்தல் மயிர்க்கயிற்றாற்
பூட்டியெனக் கொள்க.
ஒழுகையுய்த்த
(17) ஆடுநடையண்ணல் (17) என மாறிக்
கூட்டுக.
18. கூகையையென
இரண்டாவது விரிக்க.
17-9.
பைந்துணிகள் வைத்த இடமறந்த கூகையை அதன்
பெடையாகிய குரால் கவற்றுமென்க.
வைத்தலை:
6விகாரம். கவலென்னும் பெயரைத் தாவென்பது
போல வருத்தமென்றுரைக்க. 7கவலை கவற்றல் - வருத்தல்.
8பறந்தலை யென்றது இடுகாட்டிற் பிணஞ்சுடுமிடத்தை.
23. வன்னிமன்றமென்றது
அக்காட்டில் வன்னிமரத்தையுடைய
இடத்தினை. அதுதான் பிணத்தொடு சென்றாரெல்லாரும் இருந்து
மன்று போறலின் மன்றெனப்பட்டது. விளங்கிய காடென்றது தன்
தொழிலில் விளங்கிய காடென்றவாறு.
ஒழுகையுய்த்த
(17) ஆடுநடையண்ணல் (17), நின் நோய்தபு
நோன் றொடையினை (9) நிற்பாடுமகள் காண்பாளாக (7); காடு (23)
காணா தொழிவதாக (8) என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவனை நீ நெடுங்காலம் வாழ்கவென
வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. நிலத்தைப் புடைப்பதைப்போன்ற முழக்கத்தோடு.
1-2.
ஆகாயத்தைத் துடைத்து, மிக உயர்ந்த வெல்லுகின்ற
கொடிகள் தேரின்மேலே அசைய.
3-4.
பெருமையையுடையனவாயினும், போரில் வஞ்சியாது
எதிர்நின்று வென்று பெற்ற பொருள்களைக் கிடைத்தற்கு
அரியனவென்று கருதாமலும் அவற்றைத் தனக்கென்று
பாதுகாவாமலும் பிறருக்குக் கொடுத்து; "அரிய வெல்லா
மெளிதினிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி" (மதுரைக்.
145 - 6)
5-6.
தான் அணிந்த ஆபரணங்களை இரவலர்க்கு மிகக்
கொடுத்த லல்லாமல் கனவினிடத்தாயினும், 'என்னுடைய துன்பத்தை
நீக்குக' என்று கூறுதலை அறியாத குற்றமில்லாத மனத்தையும்;
"செல்லுறழ் தடக்கை, இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய,
மலர் பறியாவெனக் கேட்டிகு மினியே" (பதிற். 52
: 10 - 12). அரசர்
தாம் அணிந்த ஆபரணங்களை அளித்தல்: "மார்பிற் பூண்ட
வயங்குகாழாரம், மடைசெறி முன்கைக் கடகமொ டீத்தனன்" (புறநா.
150 : 20 - 21)
கலம்:
பகைவர்பால் திறையாகப் பெற்ற ஆபரணங்கள்
எனலுமாம்; "வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து" (பதிற்.
53 - 1); "நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை
கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து" (அகநா.
124 : 1 - 2)
7. ஆடு
நடை அண்ணல் - வெற்றியைத் தோற்றுவிக்கும்
நடையையும் உடைய பெருமையோய்.
7-9. நின்னைப்
பாடும் மகள், நின்னை வீரரெல்லாரும்
புகழ்தற்குக் காரணமன யாக்கையாகிய நிரம்பிய மெய்வலி தங்கும்,
நோய் நீங்கிய வலிய கட்டைக் காண்பாளாக. யாக்கையென்பதனைப்
போலத் தொடை என்பதும் உடம்பிற்கு ஒருபெயராயிற்று.
காணிலியர் -
காணாதொழிவதாக. இது காடு (23)
காணிலியரென முடியும்.
9-10. பெரும்பாண்.
243 - 5, ந. மேற்.
10-16. மோகூர்மன்னனை
வென்றமை கூறப்படும்.
10-11. நுண்ணிய
கொடியாகிய உழிஞையினது பூவைச்சூடிய
வெல்லும் போரைச் செய்யும் அறுகை யென்னும், பெயரையுடைய
குறுநில மன்னன் நெடுந்தூரத்திலுள்ளானாயினும், தனக்கு
நட்பினனென்று நின்னைச் சொல்லி.
12. அறுகை தன்
நாட்டைவிட்டு நீங்கி மோகூர் மன்னனுக்கு
அஞ்சி ஒளித்த பிறரால் களையப்படாத வருத்தத்தைப் போக்கும்
பொருட்டு.
13-4. அரண்கள்
தா உறீஇ அரண்களை வருத்தமுறச் செய்து.
தெய்வம் வருத்தினாற் போன்ற மோகூர் மன்னனான
பழையனென்பானது முரசத்தைக் கைப்பற்றிக் கொண்டு. மோகூருக்கு
அரசன் பழையனென்பது, "பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதறுமியப் பண்ணி" (5-ஆம் பதிகம்.
13 - 4)
என்பதனாலும், "பழையன் மோகூ ரவையகம் விளங்க" (மதுரைக்.
508) என்பதனாலும் அறியப்படும்.
15-6. பழையன்
தன் மேம்பாட்டைக் கூறும் மொழிகளைக்
குறையச் செய்து அவனுடைய காவல்மரமான வேம்பினது அடிமரத்தை
வெட்டிமுரசு செய்வதற்கு அதனைச் சிறுதுண்டுகளாகச் செய்து
முற்றுவி்த்து அவற்றைக் கொண்டு வருவதற்கு ஆண்யானைகள்
பலவற்றைப் பூட்டி. முரச்சி - முற்றுவித்து.
வண்டியைச் செலுத்திய
(17) ஆடுநடையண்ணல் (7) என
இயைக்க.
17-9. கொழுப்பு
இல்லாத பசிய இறைச்சித் துண்டங்களை
வைத்த இடத்தை மறந்த, துய்போன்ற உச்சிக்கொண்டையையுடைய
தலையையுடைய கோட்டானினது சேவலை வருத்துகின்ற
பெண்கோட்டானையுடைய இடுகாட்டிடத்தில்; "குடுமிக் கூகை
குராலொடு முரல" (மதுரைக். 170). பறந்தலை
யென்றது பிணஞ்சுடும்
இடத்தை.
20-23. முரசையுடைய
பழையதாய் வருகின்ற உரிமையையுடைய
பகையரசர் பலரை வென்று, அசைகின்ற நீரையுடைய கடலால்
சூழப்பட்ட இடம் அகன்ற உலகத்தை இனிமையாக ஆண்டு இறந்த
மன்னரைக் கவித்த தாழிகளையும், வன்னிமரம் நிற்கும்
மன்றத்தையுமுடைய விளங்கிய இடுகாடு.
காடு (23) நோன்றொடையைக்
(9) காணிலியர் (8) என முடிக்க.
மன்னர்மறைத்த
தாழி: "நெடுமா வளவன், தேவ ருலக
மெய்தினனாதலின், அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி" (புறநா.
228 : 10 - 12). வன்னிமன்றம்: "சுடலை நோன்பிக ளொடியா
வுள்ளமொடு, மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்" (மணி. 6 : 86 - 7)
யாக்கையாகிய
நோன்றொடையைப் பாடுமகள் காண்பாளாக;
காடு காணாதொழிவதாக நீ நீடூழி வாழ்கவென்பது கருத்து.
(பி
- ம்.) 11. சேணோனாயினும் 18. வைத்துத் தலைமறந்த. (4)
1தா
- வருத்தம் (தொல். உரி.
46)
2முரச்சி
- முரஞ்சியென்பதன் பிறவினை; "முரஞ்சன் முதிர்வே"
(தொல். உரி.
35)
3சாடு
- சகடம்.
4கடாவோபாதியாக
- கடாக்களை ஒப்ப.
5கூந்தல்
முரற்சி: "வேந்த ரோட்டிய வேந்துவேனன்னன்,
கூந்தன் முரற்சியிற் கொடிதே" (நற்.
270 : 9 - 10)
6விகாரமென்றது,
வைதலையென்னும் வினைத்தொகை
துய்த்தலை யென்பதற்கு ஏற்ப வைத்தலையென்று வந்ததனை.
வைத்த தலை வைத்தலை யாயிற்றெனலும் ஆம்.
7கவலைகவற்றல்
: பதிற். 67
: 11.
8"கள்ளியம்
பறந்தலை யொருசிறை யல்கி, ஒள்ளேரி நைப்ப
வுடம்பு மாய்ந்தது" (புறநா.
240 : 9 - 10)
|