வானவன்   குடகடற்,  பொலந்தரு   நாவா   யோட்டிய   தவ்வழிப்,
பிறகலஞ் செல்கலா தனையேம்” (புறம். 126) என்று குறித்துள்ளார்.
  

இதுகாறுங்     கூறியது,  மகளிர் உழிஞை பாட மகிழ்  சுரத்தலின்,
குட்டுவர்   பாடிக்   கண்டோர்   பெயர்ந்து   செல்குவ   மென்னார்,
நிற்கவெனக் கருதுவர் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
  

இதனால் அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

7. நன்னுதல் விறலியர்
 

47.அட்டா னானே குட்டுவ னடுதொறும்
பெற்றா னாரே பரிசிலர் களிறே
வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவிற்
 
5சொரிசுரை கவரு நெய்வழி புராலின்
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடரழல
நன்னுதல் விறலிய ராடும்
தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே.
 

 1 - 2. அட்டானானே...........................களிறே.  

உரை :  குட்டுவன் - சேரன் செங்குட்டுவன்;  அட்டு  ஆனான் -
பகைவரை  வேரொடு  பொருதழித்தும்  அதனோடமையா னாயினான்;
அடுதொறும்  -  அதனால் அவன் பகைவரை நாடிச் சென்று  பொருந்
தோறும்  ;  பரிசிலர்  -  பரிசில்  மாக்கள் ; களிறு பெற்று ஆனார் -
களிறு  பல பரிசிலாகப் பெற்றும் அமையாது அவன்  போர்ச்சிறப்பைப்
பாடுதலே செய்வாராயினர் எ - று.
  

தன்னைப்  பகைத்த பகைவரை அவர் குலத்தோடும் தொலைத்தும்,
போர்மேற் சென்ற உள்ளம் மாறாமையின், அவர் தாமே முன்வாராமை
கண்டு  அவரை நாடிச்சென்று பொருவா னாயினா னென்றற்கு, “அட்டு
ஆனானே  குட்டுவன்”  என்றார.்  போர்  நிகழுந்தோறும் வெற்றியே
பெற்றானாக,  பரிசிலரும்  அவ்வெற்றி  யெய்துந்தோறும் விடாது பாடி
அப்பகைப்   புலத்துப்  பெற்ற  களிறு  முதலியவற்றைப்  பரிசிலாகப்
பெற்றமையின்,  “பெற்றா  னாரே  பரிசிலர் களிறே” என்றார். பரிசிலர்
களிறு  பெறுதற்கு  ஏதுவாகிய  பாட்டும், அதற்கேதுவாகிய வெற்றியும்
மேன்மேலும் நிகழ்ந்தவண்ண மிருத்தல் பெற்றாம். பெறவே, குட்டுவன்
ஆட்சியில்   போர்  பல  நிகழ்ந்தனவென்றும்,  அவற்று  ளெல்லாம்
அவன்  வெற்றியே  பெற்றுச்  சிறப்புற்றானென்றும் அறிகின்றாம். இக்
குட்டுவற்    கிளவலாகிய    இளங்கோவடிகளும்,   இக்   குட்டுவன்
அட்டானானாதலைக் கண்டு, மாடலன் கூற்றில் வைத்து, “ஐயைந்