படுவதோ ரிடைச்சொல்” என்றும், “அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லு முதலாயின” வென்றும் கூறுவர். 9 - 11. எனையதூஉம்..........................மன்னியரோ. உரை : எனையதூஉம் - எத்துணைச் சிறிது காலமேனும்; உயர்நிலை உலகத்துச் செல்லாது - துறக்க வுலகுக்குச் செல்லாமல்; இவண் - இவ்வரச வாழ்க்கையிலே ; நின்று நிலைபெற்று நின்று ; இரு நில மருங்கின் - பெரிய நிலவுலகத்தின்கண் ; நெடிது மன்னியர் - நெடுங்காலம் வாழ்வாயாக எ - று. துறக்க வுலகு செல்பவர் சிறிது போதில் மீளாராதலால், “எனையதூஉம்” என்றார். எனையதூஉம் என்றற்கு எத்துணை யின்பச் சிறப்புடையதாயினு மென்றுமாம். “எனையதூஉ மென்றது சிறிது காலமும் என்றவாறு” என்றும், “உம்மை நெடுங்காலமே யன்றிச் சிறிது காலமுமென எச்சவும்மை” யென்றும் பழையவுரையும் கூறும். “இருநில மருங்கின்” என்றதனால், இவ ணென்றது அரசவாழ்க்கை யாயிற்று. இதுகாறும் கூறியது, ஒல்லார் யானை காணின், நில்லாத் தானை இறை கிழவோய், வள்ளியை என்றலின் காண்கு வந்திசின் ; உள்ளியது முடித்தி ; நின் கண்ணி வாழ்க ; விறலியர் மறம் பாட, இரவலர் புன் கண் தீர, நாடோறும் நன்கலம் வரைவில வீசி அனையை யாகன்மாறே ; எனையதூஉம், உயர்நிலை யுலகத்துச் செல்லாது இவண் நின்று, நில மருங்கின் நெடிது மன்னியரோ எனக்கூட்டி வினை முடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “இறை கிழவோய், நின்னை வள்ளிய னென்று யாவரும் கூறுதலானே நிற் காண்பேன் வந்தேன் ; யான் உள்ளியதனை நீ முடிப்பாயாக வேண்டும் ; நின் கண்ணி வாழ்வதாக ; விறலியர் நின் மறம் பாட, இரவலர் புன்கண் தீரும்படி நன்கலங்களை வரைவில வீசி, அத்தன்மையை யாகையாலே, என்போலும் இரவலரது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிது காலமும், இவ்வுலகத்தினின்றும் உயர் நிலை யுலகத்திற் செல்லாதே, இவ் விருநில மருங்கிலே நெடுங்காலம் நிலை பெறுவாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற் சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி வாழ்த்திய வாறாயிற்று” என்றும் கூறுவர். 5 துஞ்சும் பந்தர் |