திவவினையுமுடையவாய்,   வயிரிய மாக்கள் எழீஇ, மன்றம்   நண்ணி
மறுகு   சிறைபாடும்,  இப்பெற்றிப்பட்ட  சிறப்பையுடைய   அகன்கண்
வைப்பின்    நாடு    இப்   பெற்றியெல்லா   மிழந்து  கண்டார்க்கு
அளித்தலையுடைய என வினைமுடிவு செய்க” என்பார்.
  

இதனால் குட்டுவனது  வென்றிச்    சிறப்புக்    கூறியவாறாயிற்று.  

வரம்பில்   தானை   பரவா  வூங்கென   எடுத்துச்   செலவினை
மேலிட்டுக் கூறினமையால், இப்பாட்டு வஞ்சித்துறைப்  பாடாணாயிற்று.
  

10. புகன்ற வாயம்
 

30.இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
 
5அல்குறு கான லோங்குமண லடைகரை
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
 
10செங்கோட டாமா னூனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
கால மன்றியுங் கரும்பறுத் தொழியா
 
15தரிகா லவித்துப் பலபூ விழவிற்
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரியவெள் ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் 
 
20முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்
செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
ஏன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மென்றினை றுவணை முறைமுறை பகுக்கும்
 
25புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்