2. தசும்பு துளங்கிருக்கை
 

42.இரும்பனம் புடைய லீகை வான்கழல்
மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
 
5அம்புசே ருடம்பினர் 1நேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்னுதல் கணவ
அண்ணல் யானை யடுபோர்க் குட்டுவ
மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ
 
10இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத்
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெருங்கிளை வாழ வாடியல்
 
15உளையவர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின்
மன்பதை மருள வரசுபடக் கடந்து
முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுநிலை யுயர்மருப் பேந்திய களிறூர்ந்து
மான மைந்தரொடு மன்ன ரேத்தநின்
 
20தேரொடு சுற்ற முலகுடன் மூய
மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பௌவத்து
வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத்
தண்பல வரூஉம் புணரியிற் பலவே.
 

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : தசும்பு துளங்கிருக்கை.

1 - 8. இரும்பனம் புடையல் .......... குட்டுவ.

உரை :  இரும்பனம்  புடையல்  -  கரிய  பனந்தோட்டாலாகிய
மாலையும்;  ஈகை  வான்கழல்  -  பொன்னாற்  செய்த பெரிய வீரக்
கழலுமுடையராய்   ;   மீன்தேர்  கொட்பின்  -  மீனைப் பிடிக்கும்
சூழ்ச்சியால்;  சிரல்  பனிக்கயம் மூழ்கிப் பெயர்ந்தன்ன - சிரற்பறவை
குளிர்ந்த குளத்துட்


1.சேர்ந்தோ ரல்லதென்றும் பாடம்.