நூல்
 
1. புண்ணுமிழ் குருதி
 

11

வரைமருள் புணரி வான்பிசி ருடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்
1
 
5சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப
வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற விருங்கழி நீர்நிறம்
2 பெயர்ந்து
 
10மனாலக் கலவை போல வரண்3 கொன்று
முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை
பலர்மொசிந் தோம்பிய வலர்பூங் கடம்பின்
4
கடியுடை முழுமுத றுமிய வேஎய்
5
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவி னார மார்பிற்
போரடு தானைச்
6 சேர லாத
மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்தநின்
 
20பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
தென்னங் குமரியொ டாயிடை
 
25மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.7
  

1. ஏமம் புணர் காக்கும் - பாடம்.2.நீனிறம் - பாடம்.3.
போலரண்- பாடம்.4.திரள்பூங் கடம்பின் - பாடம்.5.வோஒய்-
பாடம்.
 6.  வேலீண்டு  தானை  -  பாடம். 7. மதந் தபக்
கடந்தே -பாடம்.