இதுகாறும் கூறியவாற்றால், “சில்வளை விறலி, செல்குவையாயின் யானையோன் குன்று உவ்வெல்லையில் வெள்ளருவியையுடைய அது என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க”. இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பு கூறியவாறாயிற்று. 9. நிறம்படு குருதி |
79. | உயிர்போற் றலையே செருவத் தானே கொடைபோற் றலையே யிரவலர் நடுவண் பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும் |
5 | பிறர்நசை யறியா வயங்குசெந் நாவின் படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப அனைய வளப்பருங் குரையை யதனால் நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்து |
10 | கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாரா வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர் அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து |
15 | தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி புறம்படி னல்லது மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற் கடவு ளயிரையி னிலைஇக் கேடில வாக பெருமநின் புகழே. |
துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : நிறம்படுகுருதி. 1 - 8. உயிர் ............. குரையை. உரை : வயங்கு செந் நாவின் - மெய்ம்மைமொழியால் விளக்கம் பொருந்திய செவ்விய நாவினையும் ; படியோர் தேயத்த ஆண்மை - வணங்காதாரை வலியழித்த ஆண்மையினையும் ; தொடயோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப - தொடியணிந்த மகளிர் தோளைக் கூடுதலால் |