இதுகாறும் கூறியது : வானம் தளி சொரிந்தெனச் சில்லேராளர் பகன்றைத் தெரியல் கலிங்கம் கடுப்பச் சூடித் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு கிழவோய், பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து, மன்னர் துதைநிலை கொன்று, அருந்துறைபோகி, பண்ணிய விலைஞர்போலப் பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇ வன்றுயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மாசிதறிருக்கை கண்டனென் செல்கு வந்தனென் என்பதாம். பழையவுரைகாரர், “நாடு கிழவோய், மன்னர் பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து அம்மன்னர் பலர் கூடிச் செறிந்த நிலைமையைக் கொன்று அருந்துறை போகிக் கடலை நீந்தின மரக்கலத்தினை அறிவு சேராது வலியுறுக்கும் பண்டவாணிகரைப்போலக் கைத்தொழுதியின் புண்ணை ஒருவுவித்து வலிய துயரைக் கழித்துப் போரிடத்து வினையிலிருத்தலே விநோதமாகக்கொண்டு இரந்தோர் வாழ நல்கிப் பின்னும் இரப்போர்க்கு ஈதலின் மாறாத மா சித றிருக்கையைக் கண்டு போவேன் வந்தேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது : அவன் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறியவாறாம்.” 7. வென்றாடு துணங்கை |