4. தொழில் நவில் யானை
 

84.எடுத்தே றேய கடிப்புடை யதிரும்
போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதலணந் தெழுதருந் தொழினவில் யானை
 
5பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற்
பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டு்ங் கூற்ற முன்ப
கொடிநுடங் காரெயி லெண்ணுவரம் பறியா
பன்மா பரந்தபுல மொன்றென் றெண்ணாது
 
10வலியை யாதனற் கறிந்தன ராயினும்
வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கான்முளை மூங்கிற் கவர்கிளை போல
உய்தல் யாவது நின்னுடற்றி யோரே
வணங்க லறியா ருடன்றெழுந் துறைஇப்
 
15போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல
நோய்த்தொழின் மலைந்த வேலீண் டழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரோ
டுருமெறி வரையிற் களிறு நிலஞ்சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
 
20குவவுக்குரை யிருக்கை யினிது கண்டிகுமே
காலைமாரி பெய்து தொழி லாற்றி
விண்டு முன்னிய புயனெடு்ங் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரற் புள்ளி னொலியெழுந் தாங்கே .
 

துறை : வாகை
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : தொழில் நவில் யானை.

1 - 7. எடுத்தேறு...................முன்ப .

உரை : எடுத்தேறு ஏய - படை யெடுத்து முன்னேறிச் செல்லுமாறு
வீரரை யேவுகின்ற ; கடிப்புடை அதிரும் முரசம் கண்ணதிர்ந்தாங்கு -
குறுந்தடியால்  புடைக்கப்படுவதால் முழங்கும் தோலாற் போர்த்தலுற்ற
முரசமானது கண்ணிடத்தே குமுறி முழங்குவது