துறை : தும்பை யரவம். வண்ணமும் தூக்கு மது. பெயர் : ஒண்பொறிக் கழற்கால். 1 - 3. ஒரூஉப...................அறுவையர். உரை : ஒரு பெரு வேந்தே - ஒப்பற்ற பெரிய வேந்தே; ஓடாப் பூட்கை - போரிற் புறங் கொடாத கோட்பாட்டையும்; ஒண் பொறிக் கழற்கால் - ஒள்ளிய பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த கால்களையும்; இரு நிலம் தோயும் - பெரிய நிலம் வரையில் தொங்குகின்ற; விரி நூல் அறுவையர் - விரிந்த நூலான் இயன்ற ஆடையினையுமுடைய பகைவர்; நின்னை ஒரூஉப - நின்னை அஞ்சி நீங்குவர் காண் எ - று. பிறர்துணை வேண்டாதே தானே தன் படையைக்கொண்டு சென்று தன்னைப் போரில் எதிர்ந்தவரைப் பொருது வென்றி யெய்தும் |