1. கமழ்குரல் துழாய் |
31. | குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் |
5 | தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய் அலங்கற் செல்வன் சேவடி பரவி
|
10 | நெஞ்சுமலி யுவகையர் துஞ்சுபதிப் பெயர மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு கோடுகூடு மதிய மியலுற் றாங்குத் துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண் டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு |
15 | கருவி வானந் தண்டளி தலைஇய வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய பனிவார் விண்டு விறல்வரை யற்றே கடவு ளஞ்சி வானத் திழைத்த தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட |
20 | எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்ட னனையைமன் னீயே வண்டுபட ஒலித்த கூந்த லறஞ்சால் கற்பின் |
25 | குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின் இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு |
30 | வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்து அடங்கிய புடையற் பொலங்கழ னோன்றாள் ஒடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப் |