துறை : நாடு வாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : உருத்துவருமலிர்நிறை. உரை : கோடை நீட - வேனிற்காலம் நீட்டித்தலால்; குன்றம் புல்லென - குன்றுகள் பொலிவழிந்து தோன்ற; அருவி அற்ற பெரு வறற் காலையும் - அருவிகள் நீர் வற்றி யுலர்ந்த பெரிய வறட்சிக்காலத்தும்; கரை நிவந்து இழி தரு நனந்தலைப் பேரியாற்று - கரை யளவும் உயர்ந்து நீர் பெருகி வழிந்திழியும் அகன்ற இடத்தையுடைய பேரியாறு பாயும்; சீருடை வியன்புலம் சிறப்புப்பொருந்திய அகன்ற புலத்தில்; விடு நிலக்கரம்பை விடரளை நிறைய - விலங்கினங்கள் புல் மேய்தல் வேண்டி விடப்பட்ட கரம்பு நிலத்தில் உண்டாகிய வெடிப்புக்களில் நீர் நிறைந்து தேங்குமாறு; வாய் பரந்து மிகீஇயர் - இடந்தொறும் பரந்து மிகுதல் வேண்டி; உவலை சூடி - தழைகளைச் சுமந்து; உருத்து வரும் மலிர் நிறை - சினமுற்று வருவதுபோல ஓலிட்டு மிக்குவரும் பேரியாற்று வெள்ளத்தின்; செந்நீர்ப் பூசல் அல்லது - சிவந்த நீரின் ஆரவார மல்லது; நின் அகன்றலை நாடு வெம்மை அரிது - நினது அகன்ற இடத்தையுடைய நாட்டிடத்தே வேறே உயிர்கட்குக் கொடுமை செய்யும் போர்ப்பூசல் என்பது இல்லை; (இதற்குக் காரணந்தான் யாதோ வெனின்) பெரு விறல் பகைவர் - மிக்க வலி படைத்த |