வஞ்சித்தூக்கு     வந்ததென     வறிக.    பிறாண்டும்    இவ்வாறு
வருவனவற்றை அமைத்துக்கொள்க.
  

4. சான்றோர் மெய்ம்மறை
 

14.நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரியையே
நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு
1 புணர்ந்த விளக்கத் தனையை
 
5போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை
அக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
 
10கூற்று வெகுண்டுவரினு மாற்று2 மாற் றலையே
எழுமுடி கெழீஅய திருஞெம ரகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
3
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்
4
 
15ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ நுடங்கும்
பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி
படையே ருழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
 
20முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே.
 

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணமும், சொற்சீர்வண்ணமும்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர்  : சான்றோர் மெய்ம்மறை.


1.வந்தொருங்கு - பாடம். 2.வரினும்பாற்று - பாடம்.
3.மேமறை - பாடம். 4.வண்டுபடு துப்பின் - பாடம்.