பாசறைக்கட் சென்று தேவியின் பிரிவாற்றாமை கூறி, இனி அவள் பாற்சென்று அமைதலே வேண்டுவ தென்பதுபட நின்றமையின், இது பரிசிற்றுறையாயிற்று. பெரும்பான்மையும் ஒழுகுவண்ணமும், “அவ்வினை மேவலையாகலின்” எனவும், “யார்கொ லளியை” யெனவும் சொற்சீர் வந்தமையின் சொற்சீர் வண்ணமும் இப்பாட்டில் உளவாயின. 10. அட்டுமலர் மார்பன் |
20. | நுங்கோ யாரென வினவி னெங்கோ இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத றடிந்த கடுங்சின முன்பின் |
5 | நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும் மாற்றோர் தேஎத்து மாறிய வினையே கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே |
10 | கனவினும், ஒன்னார் தேய வோங்கி நடந்து படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும் கடாஅ யானைக் கணநிரை யலற வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து |
15 | புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ விரியுளை மாவுங் களிறுந் தேரும் வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதி னிலைஞாயில் |
20 | அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன் எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும் பரிசின் மாக்கள் வல்லா ராயினும் கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன் |
25 | மன்னுயி ரழிய யாண்டுபல மாறித் |