அவைதாம், சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கிருக்கை,  ஏறாவேணி,
நோய்தபு  நோன்றொடை,  ஊன்றுவை  யடிசில்,  கரைவாய்ப்  பருதி,
நன்னுதல்   விறலியர்,   பேரெழில்   வாழ்க்கை,   செங்கை  மறவர்,
வெருவருபுனற்றார். இவை பாட்டின் பதிகம்.
  

பாடிப்  பெற்ற  பரிசில் :  உம்பற்காட்டு வாரியையும்  தன்  மகன் 
குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ.
  

கடல்பிறக்     கோட்டிய     செங்குட்வன்    ஐம்பத்தையாண்டு
வீற்றிருந்தான்.
  

1. சுடர்வீ வேங்கை
 

41.புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய
வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
1கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
 
5காவிற் 2றகைத்த துறைகூடு கலப்பையர்
கைவ லிளையர் கடவுட் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
 
10மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சிச்
சேஎ ருற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங் கத்தம்
 
15ஒன்றிரண் டலபல 3கழிந்து திண்டேர்
வசையி னெடுந்தகை காண்குவந் திசினே
தாவ லுய்யுமோ மற்றே தாவாது
வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத் தரசுபடக் கடந்து
 
20வெவ்வ ரோச்சம் பெருகத் தெவ்வர்
மிளகெறி யுலக்கையி னிருந்தலை யிடித்து
வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின்

1.கண்ணுறுத்து - பாடம்    2. தசைத்த - பாடம்
3. கடந்து - பாடம்