காண்க.   காடு தாழி காணிலியர்    என முடித்தலு மொன்று. வன்னி
மன்றம்,   சுடலை   நோன்பிகள்   மடையிட்டுப்  பரவுமிடம்  என்று
மணிமேகலை  கூறும்;  “சுடலை  நோன்பிகள்  ஒடியா  உள்ளமொடு,
மடைதீ  யுறுக்கும்  வன்னி  மன்றம்”  (மணி.  6:86) என்பது காண்க.
பழையவுரைகாரர்,  “வன்னி  மன்ற  மென்றது,  அக் காட்டில் வன்னி
மரத்தை  யுடைய  இடத்தினை”  யென்றும், “அது தான் பிணத்தொடு
சென்றார்  எல்லாரு  மிருந்த  மன்று  போறலின் மன்றெனப்பட்டது”
என்றும்,   “விளங்கிய   காடென்றது,  தன்  தொழிலில்   விளங்கிய
காடென்றவாறு” என்றும் கூறுவர்.

இதுகாறும் கூறியது, ஆடுநடை யண்ணல், ஒழுகை யுய்த்தோய், நிற்
புகழ்ந்த   யாக்கையாகிய  நோய்தபு  நோன்றொடை,  நிற்பாடு  மகள்
காணியர் ; வன்னி மன்றத்து விளங்கிய காட்டின்கண் தாழி காணிலியர்
என்று கூட்டி வினை முடிவு செய்க.

“இதனாற்  சொல்லியது ; அவனை, “நீ  நெடுங்காலம் வாழ்க” என
வாழ்த்தியவாறாயிற்று”.

5. ஊன்றுவை யடிசில்
 

45.பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின்
நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற்
களிறெறிந்து முறிந்த கதுவா யெஃகின்
 
5விழுமியோர் துவன்றிய வன்க ணாட்பின்
எழுமுடி மார்பி னெய்திய சேரல்
குண்டுக ணகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட
நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக்
 
10கதவங் காக்குங் கணையெழு வன்ன
நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப்
பிணம்பிறங் கழுவத்துத் துணங்கையாடிச்
சோறுவே றென்னா வூன்றுவை யடிசில்
ஓடாப் பீட ருள்வழி யிறுத்து
 
15முள்ளிடு பறியா வேணித் தெவ்வர்
சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல்
அனைய பண்பிற் றானை மன்னர்
இனியா ருளரோநின் முன்னு மில்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது