“இதனாற்    சொல்லியது, அவன்   கொடைச்   சிறப்பும், அவன்
வென்றிச்   சிறப்பும்   உடன்   கூறியவா  ராயிற்று.  அம்  மறவரது
கொடைக்குக்   காரணம்   அவன்  வென்றியாகலின்,  துறை  வாகை
யாயிற்று.”
  

10. நாடுகா ணவிர்சுடர்
 

40.போர்நிழற் புகன்ற சுற்றமொ டூர்முகத்
திறாஅ லியரோ பெருமநின் றானை
இன்னிசை யிமிழ்முர சியம்பக் கடிப்பிகூஉப்
புண்டோ ளாடவர் போர்முகத் திறுப்பக்
 
5காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்
வந்திறை கொண்டன்று தானை யந்திற்
களைநர் யாரினிப் பிறரெனப் பேணி
மன்னெயின் மறவ ரொலியவிந் தடங்க
ஒன்னார் தேயப் பூமலைந் துரைஇ
 
10வெண்டோடு நிரைஇய1 வேந்துடை யருஞ்சமம்
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி யாடிய தொடித்தோண் மீகை
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
 
15சுடர்வீ வாகைக் கடிமுத றடிந்த
தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல்
புன்கா லுன்னஞ் சாயத் தெண்கள்
2
வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத்
தான்றர வுண்ட நனைநறவு மகிழ்ந்து
 
20நீரிமிழ் சிலம்பி னேரி யோனே
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கித ழணிந்து
மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப்
பாணர் பைம்பூ மலைய விளையர்
 
25இன்களி வழாஅ மென்சொ லமர்ந்து
நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாக ரேவலி னொண்பொறி பிசிரக்
 

1. ‘நிரைத்த’ என்றும் பாடம்.2. ‘தெண்கண்’ என்றும் பாடம்.