காண்க. காடு தாழி காணிலியர் என முடித்தலு மொன்று. வன்னி மன்றம், சுடலை நோன்பிகள் மடையிட்டுப் பரவுமிடம் என்று மணிமேகலை கூறும்; “சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு, மடைதீ யுறுக்கும் வன்னி மன்றம்” (மணி. 6:86) என்பது காண்க. பழையவுரைகாரர், “வன்னி மன்ற மென்றது, அக் காட்டில் வன்னி மரத்தை யுடைய இடத்தினை” யென்றும், “அது தான் பிணத்தொடு சென்றார் எல்லாரு மிருந்த மன்று போறலின் மன்றெனப்பட்டது” என்றும், “விளங்கிய காடென்றது, தன் தொழிலில் விளங்கிய காடென்றவாறு” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, ஆடுநடை யண்ணல், ஒழுகை யுய்த்தோய், நிற் புகழ்ந்த யாக்கையாகிய நோய்தபு நோன்றொடை, நிற்பாடு மகள் காணியர் ; வன்னி மன்றத்து விளங்கிய காட்டின்கண் தாழி காணிலியர் என்று கூட்டி வினை முடிவு செய்க. “இதனாற் சொல்லியது ; அவனை, “நீ நெடுங்காலம் வாழ்க” என வாழ்த்தியவாறாயிற்று”. 5. ஊன்றுவை யடிசில் |