நாடு   என இயையும்.  பாடல் சான்ற என இறந்த காலத்தாற் கூறியது
துணிவுபற்றி.  திறை  தருதலால்  நாட்டிற்  போரின்மையும்,  அதுவே
வாயிலாக   வளம்  பெருகுதலும்  பயனாதலின்  சான்றோர்  பாட்டும்
உரையும்  பெருகிப்  புகழ் விளைக்கும் என்பது பற்றி, “பாடல் சான்ற
வவரகன்றலை  நாடே”  என்றார்.  வினைஞர் தாம் சென்னியிற் சூடிய
ஆம்பலிடத்தே    தேன்    கவரவரும்   வண்டினத்தை   யோப்புவ
ரென்றதனால், நாட்டில் வாழ்வோர் நற்குடிகளாய் அரசர்க்குப் பொருள்
விளைவித்துத்தந்து   வளம்  கவரும்  பகை  முதலியன  இல்லாவாறு
காத்தொழுகுவ  ரென்றாராயிற்று  ;  “சீறூர்க்  குடியு  மன்னுந் தானே
கொடியெடுத்து,  நிறையழிந்  தெழுதரு  தானைக்குச், சிதையுந் தானே
தன்  னிறைவிழு  முறினே”  (புறம்.  314)  எனச் சான்றோர் கூறுதல்
காண்க.

பழையவுரைகாரர்,  “விளைந்தென்றதனை  விளையவெனத் திரிக்க”
வென்றும்,   “களனறு   ப்பை   யென்றது,   களத்திற்  கடாவிடுதற்
றொழிலற்ற   தூற்றாப்  பொலியை”  யென்றும்,  “பரப்பி  யென்னும்
வினையெச்சத்தினைச்   சேர்த்தி  யென்னும்  வினையொடு  முடித்து
அதனை  வரிவண்டோப்பும் என்னும் வினையொடு முடிக்க”  என்றும்,
“வண்டோப்பும் நாடென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர்.

இதுகாறும்     கூறியவாற்றால்,  வேந்தே,  நின்  தானை  வந்து
புறத்தி்றுக்கும்  ;  இனி,  நின் பகைவர் பணிந்து திறை தருப வாயின்,
அவர்  அகன்றலை  நாடுகள்  பாடல்  சான்றவாம் என வினைமுடிவு
செய்க.

இனிப் பழையவுரைகாரர், “கொற்ற வேந்தே, நின் பகைவர், தோட்டி
செப்பிப்  பணிந்து திறை  தருபவாயின்,  அவரகன்றலை நாடு பாடல்
சான்றவென மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர்.

“இதனாற்     சொல்லியது     ;   அவன்     வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.”

3. அருவி யாம்பல்
 

63.பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம்
 
5மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
 
10குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி
ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட்