“இதனாற் சொல்லியது ; காம வேட்கையிற் செல்லாத அவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று. “ “இஃது அவனரிவை கற்பு முல்லையைப்பற்றி வந்தமையால் துறை முல்லையாயிற்று.” 2 . வினை நவில் யானை |
82. | பகை பெருமையிற் றெய்வஞ் செப்ப ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப் பல்கொடி நுடங்க முன்பிற் செறுநர் செல்சமந் தொலைத்த வினைநவில் யானை
|
5 | கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல மறவர் மறல மாப்படை யுறுப்பத் தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக் காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை |
10 | இன்ன வைகல் பன்னா ளாக பாடிக் காண்கு வந்திசிற் பெரும பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் |
15 | புகன்று புகழ்ந் தசையா நல்லிசை நிலந்தரு திருவி னெடியோய் நின்னே . |
துறை : காட்சி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணமும்சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வினை நவில் யானை. 1 - 10. பகை.....................பன்னா ளாக . |
உரை : பகை பெருமையின் - நினது பகைமை பெரிதாதலால் ; தெய்வம் செப்ப - பகைவர் தமக்குப் பாதுகாவலாகத் தெய்வத்தை வழிபட ; ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் - இனி திருத்தற் கரிதாகியும் வீரர்க்கு அச்சம் பயவாத பகைவர்க்கு அச்சத்தைத் தருகின்ற பாசறையிலே ; பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர் - பல்வகைக் கொடிகள் |