துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும். பெயர் : கானுணங்கு கடுநெறி. 10 - 13. உருமுறழ்பு.............நாடே. உரை : உரும் உறழ்பு இரங்கும் முரசின்- இடிபோல முழங்கும முரசத்தோடு; பெரு மலை வரையிழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க -பெரிய மலையின் பக்கத்தே இழியும் அருவிபோல் விளங்கும் துகிற் கொடிகள் அசைய; கடும் பரி கதழ் சிறகு அகைப்ப - விரைந்த செலவாகிய சிறகுகளையுடைய குதிரையாகிய புள் பறந்தோட; நீ நெடுந் தேர ஓட்டிய - நீ நின் நெடிய தேர்களைச் செலுத்திய; பிறர் அகன்றலை நாடு - பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ - று. முரசின் முழக்கிற்கு இடி முழக்கை யுவமங் கூறல் மரபு; “படு மழையுருமின் இரங்கு முரசு”(புறம். 350) என்று ஏனைச் சான்றோரும் கூறுதல் காண்க. முரசின் என்புழி ஒடு வுருபை விரித்து முரசினொடு தேர் ஓட்டிய என இயைக்க. பழைய வுரைகாரரும், முரசினொடு என ஒடு விரித்து அதனைத் தேரோட்டிய என்பதனோடு முடிக்க” என்பர். இனி, இன்னென்றதனை அல்வழிச் சாரியையாக்கி, முழங்கவென ஒருசொல் வருவித்து, முரசு முழங்க, கொடி நுடங்க, சிறககைப்ப தேரோட்டிய என |