(பதிற். 37) என்பது காண்க. சூர், கண்டார்க்கு வருத்தத்தைச் செய்யும் தெய்வம். தெய்வத்தால் வருத்தப்படும் ஊழுடையார்க்கு யாதும் அரணாகாதவாறு போல, நின்னாற் பகைக்கப்படும் நிலையுடையார்க்கு எத்துணை வலிய அரணும் அரணாகாதவாறு சிதைத்தழிக்கும் ஆற்றலுடையது நின் தானை என்றாராயிற்று, மார்பாலும் தோள்களாலும் மனைவியாலும் முரசாலும் படைத்தலைவராலும் படை வீரர்களாலும் எனப் பல்லாற்றாலும் மாண்புடைய னாயினை யென விரிந்தது தொகுத்து, “மாண்டனை பலவே” யென்றார். இதுகாறும் கூறியது, நின் மார்பு விறல் வரை யற்று; தோள்கள் எழூஉநிவந் தன்ன; நீ வண்டன் அனையை; நின் செல்வி செம்மீன் அனையள்; நின் மறப்படைக்குத் தலைமை கொள்ளுநர் புறக்கொடை யெறியார்; நின் தானை பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று; இவ்வாற்றல் நீ பலவும் மாண்டனை யென்றவாறாம். இவ்வாறே பழையவுரைகாரரும், “நின் மார்பு பனிவார் விண்டு விறல் வரையற்று; நின் றோள்கள் எழூஉ நிவந்தன்ன; நீ தான் வண்டனென்பவனை யனையை; நின் செல்வி செம்மீ னனையள்; நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடை யெறியார்; நின் தானை நகைவர்க் கரணமாகிப் பகைவர்க்குச் சூர்நிகழ்ந்தற்று; அவ்வாற்றாற் குருசில் நீ பலவும மாட்சிமைப்பட்டனை யென வினைமுடிவு செய்க” என்று கூறுவர். இதனாற் சொல்லியது: அவற்குள்ள மாட்சியெல்லாம் எடுத்து உடன் புகழ்ந்தவா றாயிற்று. 2. கழையமல் கழனி |