துறை : விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : செங்கை மறவர். 4 - 9. களிறு...........மண்டி. உரை : -களிறு பரந்து இயல -யானைப் படையிலுள்ள யானைகள் பரந்து செல்ல ; கடுமா தாங்க - விரைந்த செலவினையுடைய குதிரைகள் தம்மைச் செலுத்தும் வீரர் குறிப்பின்படி அணி சிதையாதே அவரைத் தாங்கிச் செல்ல ; ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப - விளங்குகின்ற கொடி யசைய வருந் தேர்கள் செல்லும் நெறிக் கேற்ப விலகிச் சுழன்று செல்ல ; எஃகு துரந்து எழுதரும்- வேற்படையைச் செலுத்தி யெழும்; கை கவர் கடுந்தார் - பகைவர் முன்னணிப் படையின் இரு மருங்கினும் வரும் பக்கப் படையைப் பொருது கவரும் கடிய தூசிப் படையினையும்; வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து - வெல்கின்ற போரினையு முடைய முடிவேந்தரும் குறுநில மன்னரும் தம்மில் ஒற்றுமை மொழிந்து உடன்வர ; மொய்வளம் செருக்கி மொசிந்து |