துறை : காட்சிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : உரைசால் வேள்வி. 1 - 2. வலம்படு ..................... அம்ம. உரை : வலம்பட முரசின் - வெற்றி யுண்டாக முழங்கும் முரசினையும் ; வாய் வாள் கொற்றத்து - தப்பாத வாட்படையாற் பெறும் வெற்றியினையும் ; பொலம் பூண் வேந்தர் - பொன்னாற் செய்த பூண்களையுமுடைய வேந்தர்கள் ; பலர் தில் - பலர் தாம் உளர் ; அம்ம - இன்னமும் கேட்பாயாக எ - று. வெற்றியும் விழவும் கொடையும் குறித்து முழங்கும் மூவகை முரசுகளுள் வேந்தர்க்கு வெற்றிமுரசு சிறந்தமையின், “வலம்படு முரசினை” எடுத்தோதியும், கொற்றத்துக்கு வாயிலாதலால், “வாய் வாளை” விதந்தும் கூறினார். பொலம் - பொன். வேந்தர் பலருளராயினும் அவராற் பயனில்லை |