எண்ணினையோ     வெனின்     அதுவும்    எண்ணினேனல்லேன்;
கட்புலனுக்கு வரையறைப்பட்டதுபோல ஆபரந்தாலொத்த செலவிற் பல
யானையை  அவன்  தானையானே  காண்பல்  எனக்  கூட்டி வினை
முடிவு செய்க,” என்பர் .

“இதனாற் சொல்லியது  ;   அவன்  படைப்  பெருமைச்  சிறப்புக்
கூறியவாறாயிற்று”.

“இப்   பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை உழிஞை
யவர  மென்றது,  ஆண்டு  அப்படை யெழுங் காலத்து நொச்சி மீ்திற்
போர்  குறித்தெழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்”, என்று
பழையவுரை கூறியது ஆராயத்தக்கது.

8. பிறழ நோக்கியவர்
 

78.வலம்படு முரசி னிலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து
 
5மெல்லியன் மகளி ரொல்குவன ரியலிக்
கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப்
பல்பய னிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி
 
10பேஎ மமன்ற பிறழ நோக்கியவர்
ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தந்நாட்
டியாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே .
 

துறை : விறலியாற்றுப்படை
பெயர் : பிறழ நோக்கியவர்.

3. சில்வளை..............யாயின்.

உரை : சில்ளை விறலி-சிலவாகிய வளைகளை யணிந்த விறலியே;
செல்குவையாயின்  -  பெருஞ் சேரல்  இரும்பொறை  பால்  செல்ல
விரும்பினையாயின்;

விறலியைச் சேரமானிடத்தே ஆற்றுப்படுக்கின்றாராதலின், சில்வளை
விறலியெனச் சிறப்பித்தார் . விறல்படப் பாடியாடு மகளாதலின்,