கொள்ள' என்றது, 'மகளிர்க்கு
மகளிரும் மைந்தர்க்கு மைந்தரு (பாகரு)ம்
கோல் கொள்ள' என்றவாறு. புள்ளேர் என்புழி, ஏர்: உவமவுருபு.
பொலம்படை - பொன்னாற்செய்த நெற்றிப்பட்டம். கைம்மா - யானை.
நீத்தம் - நீந்துதற்குரிய ஆழிய இடம் என்க. ஊர்பு: செய்பு என்னும்
வாய்பாட்டெச்சம்: ஊர்ந்து - செலுத்தி. உழக்குதல் - கலக்குதல்.
கண்ணாரும் - கண்ணிறைந்த. சாயல் - அழகு. கழி - ஈண்டு மூங்கிற்
குழை. துரத்தல் - செலுத்துதல். வட்டு - வட்டமானதொரு மணநீர்
அடைத்த கருவி. இதனை,
"குலிகநீர் நிறைந்த பந்து" (சீவக.968) எனவும்,
"அரக்குறு நறுநீர்
அஞ்செங் குலிகம் குங்கும வூறலொடு கொண்டகத் தடக்கிய எந்திர
நாழிகை" (பெருங். 1. 41: 16-8) எனவும் பிறர் கூறுமாற்றானும் உணர்க.
பாய்தேரான் - பாண்டியமன்னன். பாண்டியமன்னனை ஈண்டு
நினைந்து கூறுதலின் பொருகளமும் அவன் போர்பொருதும் களம்
என்றல் மிகையன்று.
(பரிமே.) 50. வாளும் குந்தமும் கிடை முதலியவற்றான்
அமைக்கப்பட்டன.
இது காரின்கண் ஆடல்; மேல் இளவேனிற்காலம் (ஈண்டுக்
கூறியது வையையின்கண் கார்ப்பருவத்தே நீராடியதனை; இனிமேலே
இளவேனிற் காலத்து நிகழ்ச்சி கூறப்படும் என்றவாறு.)
62-71: நீரணி . . . . . . . . . ஆங்கதை
(இ-ள்.) நீர் அணி - நீராடுதற்கேற்ற அணிகலன்களோடு,
வெறி
செறி மலர் உறு கமழ் தண் தார் வரை அகலத்து - தேன் செறிந்த
மலர்களாற் புனைந்த மிக்க நறுமணத்தையுடைய குளிர்ந்த மாலைகளையும்
அணிந்த மலைபோன்ற மார்பினிடத்தே, அவ் ஏர் அணி - அவ் வழகிய
ஒப்பனையையும், நேர் இழை - அதற்கேற்ற பிற அணிகலன்களையும்,
ஒளி திகழ் தகை வகை செறி பொறி புனைவினைப் பொலங்
கோதையவரொடு - ஒளி விளங்காநின்ற கட்டுதல் வகைமை செறிந்த
மூட்டுவாய் புனைந்த தொழிலையுடைய பொன்னரி மாலையினையுடைய
மகளிரோடே, பாகர் இறை வழை மது நுகர்பு - பாகுதங்கிய
இளங்கள்ளைப் பருகி, களிபரந்து - களிப்பு மிகுந்து, நல் வளவினை
நாகரின் வயவு ஏற நளிபுணர்மார் - நல்ல செல்வத்தைத் தருகின்ற அற
வினையைச் செய்த நாகர்களைப் போன்று விருப்பம் மிக இடைவிடாது
இறுகப் புணர்தற்கு, சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி -
தாளம் அமைந்த பாடலின்பத்தாலே தமது கிளர்ச்சியை உடைய செவியை
நிறைத்துக் கொண்டு மேலும், ஒருவரின் ஒருவர் காரிகை மதுகண்ணிற்
கவர்புற - இருபாலரும் ஒருவரிடத்து ஒருவர் அழகாகிய |
|
|
|