கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கைத்  
   துளவஞ் சூடிய அறிதுபி லோனும்  
          30 மறமிகு மலியொலி மாறடு தானையாற் 
   றிறனிகந்து வரூஉ மவருயி ரகற்றும்  
   விறன்மிகு வலியொலி பொலிபகழ் புழுதியின்  
   நிறனுழு வளைவாய் நாஞ்சி லோனும்  
   நானிலந் துளக்கற முழுமுத னாற்றிய  
          35 பொலம்புனை யிதழணி மணிமடற் பேரணி 
	   இலங்கொளி மருப்பிற் களிறு மாகி  
	   மூவுரு வாகிய தலைபிரி யொருவனை  
   படர்சிறைப் பன்னிறப் பரப்புப் பகையைக்  
   கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை  
          40 ஏவலின் முதுமொழி கூறும் (40)  
   சேவலோங் குயர்கொடிச் செல்வநற் புகழவை  
   கார்மலர்ப் பூவை கடலை யிருண்மணி  
   அவையைந்து முறழு மணிகிளர் மேனியை  
   வலம்புரி வாய்மொழி யதிர்புவான் முழக்குச்செல்  
          45 அவைநான்கு முறழு மருள்செறல் வயின்மொழி 
   முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவைமூன்றும்  
   கடந்தவை யமைந்த கழலி னிழலவை  
   இருமை வினையுமில ஏத்துமவை  
   ஒருமை வினைமேவு முள்ளத்தினை  
          50 அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை 
   அடியுங் கையுங் கண்ணும் வாயும்  
   தொடியு முந்தியுந் தோளணி வலயமும்  
   தாளுந் தோளு மெருத்தொடு பெரியை  
   மார்பு மல்குலு மனத்தொடு பரியை  
          55 கேள்வியு மறிவு மறத்தொடு நுண்ணியை 
   வேள்வியு மறனும் விருப்பொடு வெய்யை  
   அறாஅ மைந்திற் செறாஅச் செங்கட்  
   செருமிகு திகிரிச் செல்வ வெல்போர்  
   எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்ப்  
          60 புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பினோய்  
	   அன்னையென நினைஇ நின்னடி தொழுதனெம்
  
 | 
 
  |