பன்மா ணடுக்க விறைஞ்சினேம் வாழ்த்தினேம்  
          முன்னு முன்னும்யாஞ் செய்தவப் பயத்தால்  
          இன்னு மின்னுமெங் காம மிதுவே.  
         
       
      
        கடவுள் வாழ்த்து  
        நல்லெழுதியார் பாட்டு; பண்ணோதிறம்  
         
        உரை  
      
       
      1 - 6: மணிவரை . . . . . . . நேமிமால்  
       
       
            (இ-ள்.) மணிவரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று அணி 
      வனப்பு  
      அமைந்த பூந்துகில் புனைமுடி - நீலமணிமலையின் மிசைப் படர்ந்த  
      இருளைக்கெடுக்கும் ஞாயிற்று மண்டிலத்தின் ஒளியினது அழகுபோலும்  
      அழகமைந்த பொன்னாடையினையும் புனைந்த திருமுடியினையும்,  
      இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் நிறனொடு மாறும் தார் - 
      அப்பெரிய நீலமலையினின்றும் வீழும் பொன்னையும் மணியையும்  
      உடைய அருவியினது நிறத்தொடு மாறுபடாநின்ற மலர்மாலையினையும்,  
      புள்ளுப்பொறி புனைகொடி - கருடப் பறவை எழுதப்பட்ட ஒப்பனை  
      செய்த கொடியினையும் உடையையாய், விண் அளிகொண்டவியல் மதி  
      - வானத்தின்கண்ணிருந்து உலகினைக் காத்தற்றொழிலை மேற்கொண்ட  
      நிறை வெண்டிங்களினது, அணிகொள் அத் தண் அளி கொண்ட -  
      அழகிய அக் குளிர்ந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட, அணங்குடை  
      நேமி மால் - அசுரரை வருத்துதலையுடைய ஆழிப்படையை ஏந்திய  
      திருமாலே;  
       
            (வி-ம்.) மணிவரை - நீலமணியாகிய மலை. இது திருமாலுக்கு 
       
      உருவுவமை. மங்குல் ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு என்க.  
      இதனை நோய் மருந்து என்றாற்போலக் கொள்க. ஞாயிறு அதன் ஒளிக்கு  
      ஆகுபெயர். ஞாயிற்றொளி பொன்னாடைக்கும் பொன்முடிக்கும் உவமை. 
      ஞாயிற்றின் அணிபோன்ற வனப்பமைந்த என்க. அணி - அழகு. வனப்பு 
      - அழகு. இறுவரை - பெரிய மலை. பெரிய அந் நீலமலை என்க.  
      பொன்னையும் மணியையும் வரன்றிவரும் அருவி என்க. அருவி:  
      மலர்மாலைக்கு உவமை. புள் - கருடப்பறவை. பொறி - புனை கொடி:  
      வினைத்தொகையடுக்கு. அளி - காத்தற்றொழில். திங்கள் மண்டிலத்தின்  
      நிலவொளியாலே உலகத்துயிர்கள் செழித்து வளர்கின்றன என்பவாதலின், 
      திங்கள் காத்தற்றொழிலை மேற்கொண்டமை உணர்க.  
       
            திங்கள் பூதவெளியினின்று உயிர்களைத் தன் ஒளியாலே 
      காத்தல்  
      போன்று இறைவன் அறிவுவெளியினின்று உயிர்களைத் தன் அருளாலே  
       
      ப.--15   |