மகளிர் இயங்குதலால், அவர் 
      அணிகலனினின்றும் வீழ்ந்த மணி  
      அவ்வுழுநிலத்தைச் சிதைக்கும்.  
       
            42-46: தம்மைப் பிரிந்துசென்ற தலைவர் விரைவில் 
      மீண்டுவந்து  
      கூடுதற்பொருட்டுத் தலைவியர் செய்யும் தெய்வ விழாவும், அத் தலைவர்  
      வந்து கூடிய பின்னர் அம் மகளிர் வையைக் கண்ணும் அவர்  
      கூடற்கண்ணும் செய்யும் விருந்தும் தம்மில் காரணகாரியங்களாய்த்  
      தடுமாறி வருதல் இல்லற நெறியாதலால், அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று.  
       
            47-53: மயிலையும் கோழிக்கொடியையும் பிணிமுக மூர்ந்துசெய்யும் 
      வெல்போரையும் உடைய இறைவனே! மக்களைப் பணிந்து வாழ்த்தும்  
      புன்செயலை விடுத்து, யாமும் எம்சுற்றத்தாரும் நின் புகழை ஏத்தி நின் 
      திருப்பரங்குன்றத்தை எம் பிறவித் துன்பம் நீங்கி இன்பம் மலிந்த  
      நாட்களை யாம் பெறுக என்று வேண்டிப் பாடித் தொழுகின்றேம்.  
       
       
            தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி  
             ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ  
             விடையரை அசைத்த வேலன் கடிமரம்  
             பரவினர் உரையொடு பண்ணிய விசையினர்  
           5 விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் 
             கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ  
             மாலை மாலை அடியுறை யியைநர்  
             மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்  
             ஒருதிறம், பாணர் யாழின் தீங்குர லெழ  
          10 ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசையெழ 
             ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ  
             ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத  
             ஒருதிறம், மண்ணார் முழவின் இசையெழ  
             ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப  
          15 ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க 
             ஒருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க  
             ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்  
             நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற  
             ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற  
          20 மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல்  
             மாறட்டான் குன்றம் உடைத்து;  
       
        | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |