அருமையுடையளோ அங்ஙனம் அரியளாதலை
யான் இதுகாறும் அறிந்து
கொண்டேன் இல்லையே, ஈதா வருபுனல் வையை மணல் தொட்டேன்
மணம் தருவேள் தண்பரங் குன்றத்து அடிதொட்டேன் - இதோபார்
ஒழுகும் நீரையுடைய இவ்வையை யாற்றின் கடவுட்டன்மையுடைய
மணலைத் தொட்டு ஆணையிடுகின்றேன் காதலர்க்கு இருவகைப்
புணர்ச்சியையுந் தரும் செவ் வேளுக்குரிய குளிர்ந்த இத்
திருப்பரங்குன்றத்தின் அடியைத் தொட்டு ஆணையிடுகின்றேன்,
'என்பாய் - என்று (யான் கூறியதனைக் கேட்ட பின்னரும்)
பொய்யாணையே இடாநின்றாய், கேளிர் மணலின் கெழுவும் இதுவோ
- ஏடா! கேளிரை ஒத்த இம் மணலின்கண் நினக்குள்ள அன்புரிமையும்
இத்தகைய பொய்ம்மையுடையது தானோ, ஏழ் உலகும் ஆளி
திருவரைமேல் அன்பு அளிது - ஏழுலகங்களையும் காத்தருளும்
முருகப் பெருமானுடைய திருப்பரங்குன்றத்தின்பால் நீ கொண்டுள்ள
அன்பும் இரங்கத்தக்கதே ஆகும்;
(வி - ம்.) இருள் என்பது முதலாக குன்றத்தடி தொட்டேன்
என்பது முடியத் தலைவன் கூற்றைத் தோழி கொண்டு கூறியது.
இலங்கிழை: அன்மொழித்தொகை. அறிந்திலேன் என்றது, குறிப்பு
மொழி. நீ சொல்லாமலே எனக்கிது தெரியும் என்றவாறு.
'என்பாய்' என்றது, மீண்டும் பொய்ச்சூளே மொழிகின்றாய்
என்பது
பட நின்றது. மணந்தரு வேள் என மாறுக. என்றது முன்னர்த் தலைவன்
"தண்பரங்குன்று வரையா நுகர்ச்சியும் அகலா மகன்றி னன்னர்ப்
புணர்ச்சியும் நல்கும்" என்றதனைக் கருதிக் கூறிய படியாம். வேள்
- செவ்வேள்; முருகன்.
வையை மணல் தாயர்மடியிற் றவழ்வதுபோன்று தவழ்ந்து
விளையாட இடனாதல்பற்றிக் 'கேளிர் மணல்' என்றாள். கெழுவு -
அன்புரிமை. நின் அன்பு பொய்யன் பென்பாள், 'அளிது' என்றாள்.
ஏழுலகு என்றது, மூன்று பகுதியாய் ஏழு ஏழாயமைந்த உலகங்கள்
என்றவாறு. எனவே அனைத்துலகும் ஆள்பவன் என்றாளாயிற்று.
திருவரை - திருப்பரங்குன்றம்.
(பரிமே.) 60. ஈதா என்பது ஒரு மரூஉ முடிவு; அஃது இக்
காலத்து இந்தா (இதோ) என்று வழங்கப்படும்; சுட்டுநீண்டது.
61. மணத்தைத் தரும் வேள்.
65 - 71: என்னை . . . . . . சூள் கூறல்
(இ - ள்.) என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் -
(மேற்கூறியவாறு தலைவனைப் பழித்த தோழி பின்னும் அவனை நோக்கி)
ஏடா! இங்ஙனமே நீ பொய்ச்சூள் மொழியும் இயல்புடைய ஆதலின் நீ
எனக்கு அருள் செய்யாது பரத்தமையுடையையாயிருந்தும் எனக்கு அருள்
செய்வதாகச் சொல்லித் திருவருளையுடைய முருகப் பெருமான்மிசைச்
சூளுறுவாயாயின் |
|
|
|