பதின்மூன்றாம் பாடல்  
        -----  
         
        திருமால்  
         
      
      பொருட் சுருக்கம்  
       
            1-13: பொன்னாடையையும், திருமுடியையும், காத்தற்றொழிலையும் 
       
      உடைய திருமாலே! ஆழிப்படையையும் சங்கையும் ஏந்திய நின்  
      திருக்கைகளுடனே மார்பினையும் தொழுபவர்க்கு நினது வைகுண்டமும்  
      உரியதாம்.  
       
            14-23: அண்ணலே! ஐம்புலன்களும், அவற்றை அறிகின்ற 
       
      பொறிகளும், ஐம்பெரும்பூதங்களும் நீயே! மூலப் பகுதியும், அறமும்,  
      காலமும், ஐம்பெரும் பூதங்களும் கூடிய மூவேழுலகத்தும் வாழும்  
      உயிர்கள் எல்லாம் நின்னிடத்தனவேயாம்.  
       
            24-37: திருப்பாற்கடலிலே அறிதுயில் கொண்டவனும், 
      பகைவர்  
      மார்பை உழும் கலப்பைப் படையேந்தியவனும், நிலத்தை நீரினின்று  
      எடுத்த ஆதிவராகமும், பிரமனும், உருத்திரனும், திருமாலுமாகிய மூன்று 
      கடவுளராகப் பிரிந்தவனும் ஆகிய ஒருவன் நீ.  
       
            38-45: நினது திருமேனி, முகில் காயாம்பூ கடல் இருள் 
      நீலமணி  
      என்னும் இவ்வைந்தனையும் ஒக்கும்; நினது அருண்மொழி, வலம்புரி  
      முழக்கத்தை ஒக்கும்; நினது செறல் மொழி முகில் முழக்கத்தையும் இடி  
      முழக்கத்தையும் ஒக்கும்.  
       
            46-49: நீ தோன்றியதும் தோற்றுகின்றதும் தோன்றுவதுமாகிய 
       
      முக்காலக் கூறுபாட்டையுங் கடந்து, அக் காலங்கள் தாமே பொருந்திய  
      திருவடி நீழலினையுடையை; நின்னை வழிபடுவோர் இருவினையும்  
      இலராவர்; நீ காத்தற்றொழில் ஒன்றிலேயே விருப்பமுடைய  
      திருவுளமுடையை.  
       
            50-57: நின் திருவடியும் கைகளும் கண்களும் திருவாயும் 
      தாமரை 
      மலரை ஒக்கும்; நினது தோள்வளையும் திருவுந்தியும் வாகுவலயமும்  
      திருவடிகளும் தோளும் பிடரியும் பெரியன; நின் கேள்வியும் அறிவும்  
      அறமும் நுண்ணியன; நீ வேள்வியிடத்து விருப்பமும் மறமும் உடையை.   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |