(வி - ம்.) முகில் மலைமாலையை முற்றுபு அதன் கல் குறைபட  
      நீரை எறிந்து, யானைக் கோட்டின் கறையைக் கழுவிற்று என்க. உரு  
      மேற்றினம் என மாறுக; இடியேற்றுத்திரள். உடலுதல் - சினத்தல். முற்றுபு 
      - முற்றி. சூழ்ந்து. மலைமாலை - மலை ஒழுங்கு. அழி - மிக்க. கறை -  
      களங்கம். புலியைப் போழ்ந்தமையாலே உண்டான கறை என்க.  
      மழைத்துளியின் விசைமிகுதி கூறுவார் கறைகழீயிஇன்று என்றார். மழை  
      மிகுதி கூறுவார், கடல் குறைபடுத்த நீர் என்றார். பெரிய கடலும்  
      வற்றும்படியாக முகக்கப்பட்ட மிக்கநீர் என்றவாறு. கழீஇயின்று -  
      கழுவிற்று.  
       
            (பரிமே.) பூநுதல் - புகர்நுதல். அழிகறை - இகப்பரிய 
      கறை.  
       
       6 - 11: காலை . . . . . . . . . வையை  
       
       
            (இ-ள்.) வையை - வையையாறு; வான் காலை கடல் படிந்து 
      -  
      மேகம் காலைப்பொழுதிலே கடலிலே படிந்து அது குறைபட முகந்த 
      நீரோடு, காய் கதிரோன் போய வழி - சுடா நின்ற ஞாயிறு போனவழியே 
      மேலைத்திசையிற்போய், மாலை மலைமணந்து - மாலைப்பொழுதிலே  
      மலையை அடைந்து, மண் துயின்ற கங்குலான் - இம் மண்ணுலகத்து  
      வாழும் உயிரினமெல்லாம் உறங்காநின்ற இராப்பொழுதெல்லாம்  
      தானுறங்காதே, ஆற்றும் மழை தலைஇ - வழங்கிய மழைபெய்தலாலே  
      அந் நீரினோடு, மரன் ஆற்றும் மலர் நாற்றம் - மரங்கள் தரும் மலர்  
      மணமும், மலர் ஆற்றும் தேன் - மலர்கள் தரும் தேன் மணமும்,  
      செறு வெயில் உறுகால கான் ஆற்றும் கார் நாற்றம் - சினந்து சுடும்  
      வெயிலையும் மிக்க காற்றையும் உடையவாகிய காடுகள் தரும் வெங்கார்  
      மணமும், கொம்பு உதிர்த்த கனி நாற்றம் - மரக்கொம்புகள் உதிர்த்த  
      கனிகளின் மணமும், நாற்றம் உடன் கலந்து தழீஇ வந்து தான் தரூஉம் 
      - ஆகிய இம் மணங்களை ஒருசேரக் கலந்து கொணர்ந்துவந்து தான்  
      பிறர்க்குக் கொடாநின்றது;  
       
            (வி-ம்.) வான் தரும் மழை பெய்தலால் வையை மலர் 
       
      முதலியவற்றின் மணங்களை ஒருங்கே கலந்து கொணர்ந்து தான்  
      பிறர்க்குக் கொடாநின்றது என்க.  
       
            காய்கதிரோன்: வினைத்தொகை. கதிரோன் போயவழி 
      என்றது  
      மேற்றிசையை எனவே, கடல் குணகடல் என்பது பெற்றாம். மலை -  
      சையமலை. மணந்து - சேர்ந்து. மண் - உயிர்கள்: ஆகுபெயர். தலைஇ  
      - பெய்து; இவ் வெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. கங்குலான் -  
      இரவின்கண்: உருபுமயக்கம். ஆற்றுதல் - தருதல். மரன் - மரம். மலர் 
      ஆற்றும் தேன் என மாறுக. செறுவெயில்: வினைத்தொகை; சுடும்  
      வெயில் என்க. உறு - மிகுதி. கால - காற்றையுடையவாகிய. இதனால்  
      முதுவேனிற் பருவத்திறுதியிற் பெய்த மழை என்பது பெறப்பட்டது.  
      என்னை? முறுகிய வெயிலானும் பெருங் காற்றானும் சுட்டலைக்கப்பட்ட 
      காடு என்றமையான் என்க. இஃது   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |