தண்டா அருவியோ டிருமுழ வார்ப்ப  
   அரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப்   
   புரியுண்ட பாடலொ டாடலுந் தோன்றச்  
55	சூடு நறவொடு காமமுகிழ் விரியச்  
   சூடா நறவொடு காமம் விரும்ப  
   இனைய பிறவு மிவைபோல் வனவும்  
   அனையவை எல்லா மியையும் புனையிழைப்  
   பூமுடி நாகர் நகர்;  
          ( இவையும் கொச்சகம்)   
          60 மண்மருள் தகைவகை நெறிசெறி யொலிபொலி  
		   அவிர்நிமிர் புகழ்கூந்தற்  
	   பிணிநெகிழ் துணையிணை தெளியொளி திகழ்ஞெகிழ்  
		   தெரியரி மதுமகிழ் பரிமலர்  
		   மகிழுண்கண் வாணுதலோர்  
	   மணிமயிற் றொழிலெழி லிகலிமலி திகழவிழ  
		   திகழ்கடுங் கடாக்களிற்  
		   றண்ண லவரோ  
	   டணிமிக வந்திறைஞ்ச அல்லிதப்பப் பிணிநீங்க  
		   நல்லவை எல்லா மியைதருந் தொல்சீர்  
		   வரைவாய் தழுவிய கல்சேர்கிடக்கைக்  
		   குளவாய் அமர்ந்தா னகர்;   
          (இது முடுகியல்)
  
             திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத்  
65	திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தேற்றி  
   மகர மறிகடல் வைத்து நிறுத்துப்  
   புகழ்சால் சிறப்பின் இருதிறத் தோர்க்கும்  
   அமுது கடைய இருவயி னாணாகி  
   மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க  
70	உகாஅ வலியின் ஒருதோழங் காலம்  
	   அறாஅ தணிந்தாருந் தாம்;   
	   மிகாஅ மறலிய மேவலி யெல்லாம்  
	   புகாஅவெதிர் பூண்டாருந் தாம்;   
	   மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம்  
75	அணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச்
  
 | 
 
  |