ஒலித்தன்று - பறையொலி எழுந்ததாக 
      அவ்வொலியோடே கிளர்ந்து  
      எழும் ஊரவர் ஆரவாரமும் எழுந்தது;  
       
            (வி - ம்.) தொடி - வளையல். செறித்தல் - அழுத்துதல். 
       
      தோள்வளை - தோளில் அணியும் வளையம். கொடி - எழுதின  
      தொய்யிற் கொடி. சேரா - ஒன்றனோடு ஒன்று சேர்ந்து: செய்யா என்னும்  
      வாய்பாட்டு எச்சம். அழிய என ஒரு சொல் வருவித்து முடிக்க திரு  
      - அழகுடைய. கோவை - மேகலையணி. காழ் - நூல் முத்துத்தொடை  
      - முத்துமாலை. கலிழ்பு - கலிழ்ந்து: கலங்கி என்க. மழுகுதல்  
      - மழுங்குதல். உகிர் - நகம். கொடிறு - கபோலம் (கன்னம்). உண்ட  
      - ஊட்டப்பட்ட செம்பஞ்சி - அலத்தகக் குழம்பு: ஈண்டும் அழிய  
      என்னும் ஒரு சொல் வருவித்து முடிக்க. நகில் - முலை. அளறு  
      - (குங்குமக்) குழம்பு. வண்ட லிடுதலாவது வரிவரியாய்ச் சேர்தல்.  
      இலை - தளிரானாய மாலை: ஆகுபெயர். இதனைப் படலைமாலை  
      என்றும் கூறுப. ஈர்ஞ்சாந்து - குளிர்ந்த சந்தனம். நிழத்த - அழிப்ப.  
      "சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்து இரும்புனம் நிழத்தலின்"  
      (குறிஞ்சிப்பாட்டு, 155 -9) என்புழியும் அஃதப்பொருட்டாதலுணர்க.  
       
            வரைச்சிறை - மலையை ஒத்த அணைக்கட்டு. உடைத்ததை 
       
      என்புழி ஐகாரம் பகுதிப்பொருளது. திரைச்சிறை - அலையாகிய சிறகு. 
      கரைச் சிறை - கரையாகிய காவல். உரைச்சிறை - சொல்லாகிய காவல்.  
      ஊர்: ஆகுபெயர்; ஊரிலுள்ள மாந்தர்.  
       
            (பரிமே.) 15. தொய்யிற் கொடிகள்.  
       
            16. ஆணிதிரண்ட முத்தினாகிய வடம்.  
       
            24. அஃது அடைக்க ஆளேறுதற்குப் பறையறைக என்னும் 
      கரை  
      காப்பார் உரையாகிய காவலோடே.  
       
            16 - 17. அழிய என்னும் வினைச்சொல் வருவிக்கப்பட்டது. 
       
       
       25 - 37: அன்று . . . . . . . . . . இடந்திரீஇ  
       
            (இ-ள்.) அன்று - அவ்வாறு ஊரவர் கிளர்ந்து ஆரவாரஞ் 
      செய்த 
      அந்த நாளிலே, போர் அணி அணியில் புகர்முகஞ் சிறந்தென - போர்  
      செய்தற்கு அணிவகுக்கப்பட்ட அணியிடத்தே புள்ளிகளையுடைய  
      முகத்தையுடைய களிற்றியானைகள் நிரைநிரையாகச் சிறப்பாகச்  
      செல்லுமாறு போல, நீர் அணி அணியில் - இந்த நீராட்டுவிழவின் 
      பொருட்டு வகுக்கப் பட்ட அணியின் கண்ணே, நிரை நிரை  
      பிடிசெல-வரிசை வரிசையாகப் பிடியானைகள் சிறந்து செல்லாநிற்றலானும், 
      ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் - அழகாக அணியப்பட்ட  
      அணிகலன்களையும் இளமையுடைய ஆடவரும் அவருக்கு இனியராகிய  
      மகளிரும், (32) அடுபுனலது செல அவற்றை இழிவர் - கரை  
      முதலியவற்றை இடிக்கும் அவ் வையையாற்றின் வெள்ளத்தினூடே புகுதற் 
      பொருட்டு அவ் வணிகலன்களை நீக்கி, ஈரணி அணியின் - நீராடத்   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |