தலைமகள் அவர் கூற்றாகவே கூறி மேலும் விறலிக்குக்  
      கூறுகின்றாள் என்பது கருத்து.)  
       
       96 - 104: சினவல் . . . . . . . . . . கூடுப  
       
       
            (இ - ள்.) (101) இல்லவர் - இங்ஙனம் ஊடிநின்ற 
      காதற்  
      பரத்தையின் இல்லின்கண்ணுள்ள முதுபெண்டிர் அவளை நோக்கி,  
      சினவல் - ஏடி நீ இவ்வாறு வெகுளாதேகொள், நின் உண் கண்  
      சிவப்புஅஞ்சுவாற்கு - தலைவனோ நினது மையுண்ட கண் சினத்தாலே  
      சிவத்தலுக்குப் பெரிதும் அஞ்சாநின்றான் அங்ஙனம் அஞ்சுபவனிடத்து,  
      துனி நீங்கி ஆடல் தொடங்கு - நீ ஊடல் தவிர்ந்து அவனோடு  
      விளையாடுதலைத் தொடங்குவாயாக, துனி நனி கன்றிடின் -  
      அங்ஙனமன்றி நீ செவ்வியுணராது ஊடலின்கண் மிகுவாயாயின்,  
      காமங் கெடும் - அவன் காமவின்பம் பதனழிந்து கெட்டொழியும்,  
      மகள் - நீயோ பெண்மகள், இவன் அல்லா நெஞ்சம் உறப் பூட்டக்  
      காய்ந்து வல் இருள் நீயல் - இத் தலைவனுடைய சுழற்சியையுடைய  
      நெஞ்சம் இறுகப்பூட்டிக் கொள்ளும்படி சினந்து (இவன் நின்னைப்  
      பிரிந்து போதல் ஒருதலை) பின்னர் இவனைத் தேடிச்செறிந்த  
      இருளையுடைய இரவின்கண் செல்லுதல் வேண்டும்; அங்ஙனம்  
      செல்லாதொழி, அது பிழை ஆகும் என - அவ்வாறு இருட்கண்  
      செல்லுதல் இடனறிந்தூடி இனிதின் உணரும் ஒழுக்கத்திற்குப்  
      பிழையாகும் என்று கூறித்தேற்றுதலானும், வல்லவர் -  
      ஊடலுணர்த்துதலிலே வல்ல வாயில்களும், இரந்து பரந்து உழந்து  
      ஆட ஊடல் உணர்த்தா - இரந்து கூறியும் மிக்குக் கூறியும் வருந்திக்  
      கூறியும் அவ் விருவரும் தம்முட் கூடும்படி ஊடலை உணர்த்துதலானும்,  
      நல்லாய் - விறலியே, களிப்பர் குளிப்பர் காமம் கொடிவிட துனிப்ப  
      அளிப்ப - இருவரும் கள்ளுண்டு களியாநிற்பர் வையையின்கண்  
      நீராடா நிற்பர் காமவின்பம் தளிர்க்கும்படி ஊடிக்கொள்வர் ஊடல்  
      சிறிது மிக்கவுடன் அது தீர்ந்து கூடாநிற்பர். அங்கங்கே சென்று  
      விளையாடா நிற்பர்;  
       
            (வி - ம்.) சினவல் - வெகுளாதே. கன்றிடில் - முதிருமாயின். 
       
      காமம் - காமவின்பம். நீ மகளாதலானே இருளின்கண் நீயல் என  
      இயைத்துக் கொள்க. அல்லாக்கும் நெஞ்சம் என்க. உறப்பூட்ட -  
      வெறுக்கும்படி என்றவாறு. அது - அங்ஙனம் ஊடுதல்.  
       
            இவ்வாறு ஊடுவாயானால் அவன் நின்னை அகன்று போவான்; 
      பின்னர் அவனைத் தேடி நீ இருளிலே செல்லும்படி நேரும், அவ்வாறு 
      நிகழும்படி செய்து கொள்ளாதே என்பது கருத்து.  
       
            இல்லவர் - இல்லிலுள்ள முதுபெண்டிர் பரந்து என்றது, 
      மேற்  
      சென்றிடித்துக் கூறியும் என்றவாறு. ஆட - கூடும்படி. நல்லாய்   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |