பக்கம் எண் :

406கலித்தொகை

எ - து: கார்காலம் முதிர்கையினாலே பூங்கொத்துக்கள் அலர்ந்த கமழ்கின்ற இதழ்களை யுடையனவாகிய மலர்களைச் சூடித் தலைமைமுதிர்ந்து புலவர்வாயிற் கவிகளைத் தான்பெற்று, ஊரைச் சூழ்ந்து வருதலிற் பெரிய நிலமடந்தைதான் ஒரு பூமாலையைச் சூழ்ந்துகொண்டிருந்த தன்மைபோல அழகு பொலிவுபெற்ற வையையாற்றினது நீர் சூழ்ந்து மதிலைப்பொரும் பகை யன்றிப் பகைவர் போரால் 1வளைத்தலைச் சிறிதும் அறியாத புரிசை சூழ்ந்த புனலையுடைத்தாகிய மதுரையை யுடையவன்; எ - று.

புனலூரனென்றது பாண்டியனையாதலிற் பாட்டுடைத் தலைவனே கிளவித்தலைவனாகக்கூறிய அகப்புறமாயிற்று. இதற்கு விதி "காமப் பகுதி கடவுளும் வரையா, ரேனோர் பாங்கினு மென்மனார் புலவர்" (1)என்பதனுள் ‘ஏனோர்பாங்கினும்’ என்பதனாற் கூறினாம்.

6 நலத்தகை யெழிலுண்க (2)ணல்லார்தங் கோதையா
லலைத்தபுண் வடுக்காட்டி யன்பின்றி வரினெல்லா
(3) புலப்பேன்யா னென்பேன்ம னந்நிலையே யவற்காணிற்
கலப்பே னென்னுமிக் கையறு நெஞ்சே

1. தொல். புறத். சூ. 28.(அ) இதனுரையிலும் இவரால், குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறியதற்கு, "சீர்முற்றி...............புனலூரன்" என்பது மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது; (ஆ) முன்னோர்கூறிய குறிப்பினு மென்பதற்கு, முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினு மென்று பொருள்கூறி, அஃது இயற்பெயர் சார்த்தி வருதற்கு "வையைதன் னீர்முற்றி.........................புனலூரன்" என்பதை மேற்கோள்காட்டி, இது குறிப்பினாற் பாட்டுடைத் தலைமகனைக் கிளவித் தலைமகனாகக் கூறியதென்பர், இளம்பூரணரும்; தொல். புறத். சூ 22. ‘வழக்கியன்’

2. (அ) "குறுகலென் றொள்ளிழை கோதைகோ லாக, விறுகிறுக யாத்துப் புடைப்ப" (ஆ) "கமழ்கோதை கோலாப் புடைத்து" பரி. 9 : 39 - 40, 12: 58. (இ) "கோதை கோலா விறைஞ்சி நின்ற, வூதையஞ் சேர்ப்பனை யலைப்பேன் போலவும்" கலி. 128 : 18 - 9. (ஈ) "மகளிரோச்சு, மட்டவிழ் மாலை போல மகிழ்ந்துபூண் மார்பத் தேற்று" (உ) "சந்தனத் தளிர்நன் மாலை, யோக்கினார் கண்ணி சுண்ண முடற்றினார்" சீவக. 2291. 2661. (ஊ) "நீர்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயிற், போர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக், கொங்கலர் கோதை கொண்டுபுறத் தோச்சியும்" பெருங். (1) 42: 184 -186. (எ) "கோதைகொண் டோச்சு வாரும்" கம்ப. நீர்விளை. 5.

3. "புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங், கலத்த லுறுவது கண்டு" குறள். 1259.

(பிரதிபேதம்) 1வளைதலை.