கொள்கையினாலே 1இமைபொருந்துதலுங் கூடும், அதனை இணைந்த மலராற் செய்த கோதையினையுடைய (1) கலைகளெல்லாம் முற்றக்கற்று 2முதிர்ந்த பரத்தையர் நன்றென்று கொண்டாடும்படி நாடோறும் மணஞ் செய்யும் 3மனைகளிடத்தே நின்று முழங்கும் நின் மணத்தை எமக்கு உணர்த்தும் முழவோசை வந்து போக்கும், அதுவே குறை; எ - று. இயைப, அகரவீற்றுத் தொழிற்பெயர். ஆல், ஐயப்பொருட்டு. 11 | (2)அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம் 4புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத 5லியைபவா |
1. கலைகளென்றது. (அ) "வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்துக், கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும், பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலுந்,தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலுங், கந்துகக் கருத்து மடைநூற் செய்தியுஞ், சுந்தாச் சுண்ணமுந் தூநீ ராடலும், பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமுங், காயக் கரணமுங் கண்ணிய துணர்தலுங், கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும், வட்டிகைச் செய்தியு மலராய்ந்து தொடுத்தலுங், கோலங் கோடலுங்கோவையின் கோப்புங், காலக் கணிதமுங்கலைகளின் றுணிவு, நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த, வோவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும்" (மணி. 2 : 18 - 31.) எனக் கூறப் பட்டனவும் பிறவுமாகிய மகளிர்க்குரிய அறுபத்துநான்கு கலைகளை; இவை பரத்தையர்க்கு இன்றியமையாதவை யென்பது (ஆ) "எண்ணெண் கலையு மிசைந்துடன்................பசந்த மேனியள்" (இ) "எண்ணெண் கலையோர்" (ஈ) "எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர்" சிலப். 8: 64 - 68, 18: 16, 22: 138 - 139. (உ) "கலையுணர் மகளிர்" (ஊ) "கலைவலார்" சீவக. 1625, 2107. (எ) "கலையுணர் மகளிர்" பெருங். (1) 40: 184. (ஏ) "கலையுணர் நெஞ்சிற் கூத்தியர்" கூர்ம. நவகண்டத். 50. என்பவற்றாலும் அறியலாகும்; (ஐ) இக்கலைகளை, "யாழ்முதலாக அறுபத்தொருநான்கு" என்பர், கொங்குவேளிர்; பெருங். (1) 35 : 84. 2. அ) கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டு மென்பதற்கு, "அகலநீ..........................வந்தெடுப்புமே" என்பதனை மேற்கோள்காட்டி, விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டு கொள்க வென்பர்; இளம்; தொல். கற்பி. சூ. 20. "கிழவோன்விளை" (ஆ) "இப்பகுதியை வாயிலாய் வந்தார்க்கு மறுத்துத் தலைவனது பழிகளைத் தலைவி (பிரதிபேதம்) 1இமைப்பொருந்து தலுங்கூடுமதனை நின்மணத்தை........................ முழவோசை வந்து பொருதுமதுவேகுறை இணைந்த, 2முதிர்ந்துபரத்தையர், 3மனைகளிடத்தே நின்றுமுழங்கு முழவென்று முழவிறகடையாக்குக: இயைப அகரவீற்றஃறிணைத் தொழிற்பெயர், 4புகல்வனை, 5இயைவதால்.
|