| பாடு பெயனின்ற (1) பானா ளிரவிற் | | றொடிபொலி தோளு முலையுங் கதுப்பும் | | வடிவார் குழையு மிழையும் பொறையா | | வொடிவது போலு நுசுப்போ 1டடிதளரா |
10 | (2) வாராக் 2கவவி னொருத்திவந் தல்கற்றன் | | சீரார் (3) ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின் | (4) | 3போரார் கதவ மிதித்த தமையுமோ | | வாயிழை 4யார்க்கு மொலிகேளா (5) வவ்வெதிர் | | தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ |
பரத்தையர்கூட்டம், ஒத்தகாம மாகியவாறு என்னையெனின், அவரும் பொருளானாதல் அச்சத்தானாத லன்றி, அன்பினாற்கூடுதலின் அதுவும் கந்திருவத் தின்பாற்படும்; அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுவனாயின், இவன்மாட்டுத்தலைமையின்றாம்’ என்று உரைவகுத்து, "நோயும் வடுவுங்.......................இறுத்த தமையுமோ" என்பதனை மேற்கோள் காட்டி, ‘பரத்தையர் அன்பினாற் *கூடியவாறும், (*கூறியவாறும் என்றும் பிரதிபேதம்) இவர் இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் அன்மையும் அறிந்துகொள்க’ என்பர். இளம்பூரணர். தொல். களவி். சூ. 15. 1. "பானா, ளிரவினிற் றூது கொண்டோன்" திருவிளை. பாயிரம். 20. 2. "அரிமத ருண்கண்ணா ராராக் கவவின்" கலி. 91 : 14. 3. அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து, துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்" (அகம். 10; 11) என நாணு மகளிர்க்குக் கூறுதல் காண்க. 4. "போர்க்கதவின்" பட். 40. சிலப். 10: 7. உரைபார்க்க; இஃது இரட்டைக்கதவு. 5. (அ) ‘வடவேங்கடந் தென்குமரி யாயிடை’ (தொல். சிறப்புப்) என்புழி, ஆயிடையென்பதற்கு, அவற்றை எல்லையாகவுடைய நிலத்தென்று இளம்பூரணரும், அதற்கு, அவ்விரண்டெல்லைக்குளென்றும், (ஆ) "யார், மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தா, ளாகும்" (சீவக. 1038) என்புழி, அவ்விருந்தாளென்பதற்கு, அவ்விடத்திருந்தாளென்றும் இவ்வுரைகாரரும் பொருளெழுதியிருத்தலும், இவ்வாறே இகரச் சுட்டையும் (இ) "குகனென்பான் இந்நின்ற குரிசிலென்றான்" (ஈ) "இந்நின்ற, தூணினுமுளன்" (உ) "இம்முதலோர்" (ஊ) "மறக்கண் வெஞ்சின மலையென விந்நின்ற வயவர்" (கம்ப. குகப். 66. இரணியன் வதை. 124. நாகபாச. 263. படைக்காட்சி, 21) (பிரதிபேதம்) 1. அடித்தளரா, 2. கவவினொடொருத்தி, 3. போராகதவம், 4. ஆக்குமொலி.
|