யில்லத்து 1வாவென மெய்கொளீஇ யெல்லாநின் பெண்டி 2ருளர்மன்னோ கூறு எ - து: அதுகேட்ட கூனி, இவன் மனக்குறிப்பைப் பாராயென நெஞ்சொடுகூறி, (1) நெத்தப்பல கையை எடுத்து நிறுத்தினாற்போன்ற, மகளிரைக் கூடும் முறையைக் கல்லாத குறளனே! (2) மக்கள் இயங்காத உச்சியம்பொழுதிலே வந்து எம்மைக் கையைப்பிடித்து நின்னில்லத்தே வாவென்று சொல்லுதற்கு ஏடா! மிகவும் நின்னுடைய பெண்டிராயிருப்பார் சிலருளரோ? சொல்லாயென்றாள். எ - று. 17 | நல்லாய்கேள், உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய 3கொக்குரித் தன்னகொடுமடாய் நின்னையான் புக்ககலம் 4புல்லினெஞ்சூன்றும் புறம்புல்லி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் 5புல்லச் சிறிது |
எ - து: அதுகேட்ட குறளன், 6நல்லாளே! தலைக்குமேலும் நடு வில்லை யாய் வாள்போன்ற வாயையுடைய கொக்கை உரித்தாற்போன்ற வளைந்த 7மடுப்பையுடையாய்! யான் கூறுகின்றதனைக் கேள்; நின்னை யான்
‘அவ்வுமென்ற உம்மையான், உகரப்பேறே வலியுடைத்தென்க’ என்று மயிலைநாதரும் அவ்வுமென்பது இறந்தது தழுவிய வெச்ச வும்மை என்று விருத்தியுரையாசிரியரும் இராமாநுசகவிராயரும் கூறி, வல்லென்பது பலகை யென்பதனொடு புணர்வுழி வேற்றுமையில் உகரச்சாரியை பெற்று வந்ததற்கு, ‘வல்லுப் பலகை’ என்பதை மேற்கோள் காட்டினார். இதற்கு வல்லினது அறைவரைந்த பலகை என்று பொருள் கூறுவர். 1. நெத்தப்பலகை யென்பது வல்லினது அறைகீறிய பலகையென்னும் பொருளிலே கன்னடத்தில் இருவகை வழக்கிலும் பண்டும் இன்றும் சிறிது திரிந்துவழங்குகின்றதென்பர். 2. கடியென்பது விளக்கமென்னும் பொருளில் வருதற்கு கடும்பகலென்பது, தொல். உரி. சூ. 87: சே; 85. நச். மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆயினும், இவ்விடத்துக்கு அதனினும் வரைவென்னும் பொருள் சிறந்ததென்றுகொண்டு இவ்வாறு கூறினர்போலும். ‘இவ்வுரிச்சொல் பெரும்பாலும் திரிந்து நிற்கும்’ என நச்சினார்க்கினியர் எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலது. (பிரதிபேதம்)1வாவென்றெமக்கொழியவெல்லா, 2உளமன்னோ, 3கொக்கரித்தன்ன, 4புல்லினென்னெஞ்சு, 5புல்லல் சிறிது, 6நல்லோளே, 7 மடிப்பை யுடையாய்.
|