பக்கம் எண் :

874கலித்தொகை

எ - து: பிறராற் றாங்கவொண்ணாத சினத்தோட தன்வடிவைக்காட்டி அவருயிரைப்போக்கும் பாம்பும் பலரிடைப் பட்டாற் சாவாதென்னும் (1) உலக வழக்கிற்கேற்பச் சான்றோர் அவைப்படிற் பிழைக்கவுங்கூடும்; அத்தன்மையே னல்லாத எனக்குப் பூப்போலுங் கண்ணையும் (2) கடைகுழன்று தழைக்கின்ற ஐம்பாலினையுமுடையாள் செய்த இக்காமநோயின் வருத்தத்தை அறிந்து வைத்தும் இவ்வூரிலுள்ளார் தீர்ப்பதோர் உபாயம் அறிகின்றிலர். எ - று.

25 வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றா

ரஞ்சலென் றாலு முயிர்ப்புண்டா 1மஞ்சீர்ச்

செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காம

மறிந்து மறியாதிவ் வூர்

எ - து: கடிய (3) நீர்ச்சுழியிலே அகப்பட்டானொருமகனுக்குக் கரையில் நின்றோர் 2சென்றெடாமல் அஞ்சாதேகொள்ளென்று கரையிலே நின்று கூறினாலும் அவனுக்கு (4) வருத்தந் தீருதலுளதாம்; அதுபோல, அழகிய சீரையுடைய செறிந்த அழகினையுடைத்தாகிய முறுவலையுடையாள் செய்த இ்க் காமநோயை அறிந்துவைத்தும் இவ்வூரிலுள்ளார் அதனைத் தீர்த்தலாற்றாராயினும் ஒரு தண்ணளி செய்தலையும் அறிகின்றிலர். எ - று.

ஆங்க, அசை.

30 என்க (5) ணிடும்பை 3யறீஇயினெ னுங்கட்

டெருளுற நோக்கித் தெரியுங்கா 4லின்ன

மருளுறு நோயொடு மம்ம ரகல


1. ‘‘பலரிடை விழுந்த பொல்லாப் பாம்புமா ருயிர்மா யாதென், றுலகவருரைக்கும் வார்த்தை யுண்மையே போலும்’’

2. (அ) ‘‘வணரொலி யைம்பாலார்’’ இன்னா. 15; (ஆ) ‘‘வணரைம்பால்’’ (கலி. 58 : 1) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

3. ‘‘கயஞ்சான் மறுசுழி யழுந்தினளாக, முயங்கின னெடுத்த வண்ணலை’’ தமிழ்நெறி. மேற்கோள்.

4. (அ) உயிர்ப்பிடம் பெறா அது’’ (பொருந. 119) என்பதற்கு, ‘இளைப்பாற இடம் பெறாதே’ என்றும் (ஆ) ‘‘உயிர்ப்பாக’’ (கலி. 139 : 11) என்பதற்கு, ‘இளைப்பாறுதலாக’ என்றும் எழுதியிருக்குமுரைகள் நோக்கற்பாலன.

5. ‘‘ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற், கோருயிர் போல வுருகியுயக் கொள்ள, நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத், தீரமுடைமை யருளி னியல்பே’’ சூளா. துறவு. 170

(பிரதிபேதம்)1மென்சீர், இன்சீர், 2சென்றடாமல், 3உறீஇயினேன், உரைஇயினேன், 4இன்னும்.