பக்கம் எண் :

மூன்றாவது மருதம்463

பன்மலர்ப் பழனத்த (1) பாசடைத் தாமரை
யின்மல ரிமிர்பூதுந் துணைபுண ரிருந்தும்பி
யுண்டுறை யுடைந்த பூப் புனல்சாய்ப்பப் புலந்தூடிப்
பண்புடை (2) நன்னாட்டுப் பகைதலை வந்தென
5 வதுகைவிட் டகன்றொரீஇக் காக்கிற்பான் குடைநீழற்
பதிபடர்ந் திறைகொள்ளுங் குடிபோலப் 1பிறிதுமொரு
பொய்கைதேர்ந் 2தலமரும் பொழுதினான் மொய்தப
விறைபகை தணிப்பவக் (3) குடிபதிப் பெயர்ந்தாங்கு
நிறைபுன னீங்கவந் தத்தும்பி யம்மலர்ப்
(4) பறைதவிர் (5) பசைவிடூஉம் (6) பாய்புன னல்லூர

எ - து: பலமலர்களையுடைத்தாகிய மருதநிலத்திடத்தனவாகிய பசிய இலைகளையுடைய தாமரையினது கட்கினிய மலரை ஆரவாரித்துச் சென்று


1. "பாசடைத் தாமரை" லி. 71:7

2. ஒரு நாட்டுப் பகைவராற் றுன்பம் வந்துழி ஆங்குள்ள குடிகள் அந்நாட்டைக் கைவிட்டுச் செல்லுதல் மரபு: (அ) "பதியெழ வறியாப் பழங்குடி கெழீஇ" மலைபடு. 479.(ஆ) "பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய" சிலப். 1: 15 என்பவையும் 'பதியெழு வறியா - பதியினின்றும் பெயர்தலை யறியாத; எனவே பகையின்மை கூறிற்று' என்று அடியார்க்கு நல்லாரெழுதியிருப்பதும் (இ) "அதிராச்சிறப்பின் மதுரை மூதூர்" (சிலப். பதி. 39) என்புழி 'அதிராச்சிறப்பு' என்பதற்கு, 'பகைவரால் அதிர்ச்சியில்லாத சிறப்பு' என்று அரும்பத வுரையாசிரியரும், 'பகைவரால் நடுக்கமில்லாத சிறப்பு' என்று அடியார்க்கு நல்லாரும் எழுதியிருப்பவையும், (ஈ) "ஆளெலா மழிந்த தேரு மானையு மாடன் மாவு, நாளெலா மெண்ணி னாலந் தொலைவிலா நாத ரின்றித், தாளெலாங் குலைய வோடித் திரிவன தாங்க லாற்றுங், கோளிலா மன்ன னாட்டிற் குடியெனக் குலைவ கண்டான்" கம்ப. பிரமாத்திர. 147. என்பதும் ஈண்டு அறிதற்பாலன.

3. "சூறை யாட்டயர் வார்தொலை வெய்தலும், பாறி னோர்படர்ந் தாங்குப் படுகளை, கோறல் செய்தவர் நீங்கலுங் கொம்மெனச், சேற றாவயற் செறறின புள்ளெலாம்" தணிகைப். திருநாட்டுப். 112.

4. "பறை - பறத்தல்; இஃது ஆகுபெயராய்ப் பறவைக்கும் வரும்.

5. அசை, முதனிலைத் தொழிற்பெயர்.

6. (அ) பாய்தலென்பது பரத்தலாகிய குறிப்புணர்த்தி வருதற்கு, 'பாய்புனல்' என்பது மேற்கோள். தொல், உரிச். சூ. 65. சே. சூ. 50.

(பிரதிபேதம்) 1பிறிதுமோர், 2அலம்னரும்.