பக்கம் எண் :

644கலித்தொகை

கின்றவனைப் போலே தோன்றுகின்றவன் பசுத்திரளையுடைய ஆயர்மகனல்லவோ? ஆதலால், இவன் இங்ஙனம் செலுத்துந் தொழிலை ஒழியான்; இளையோளே! இஃதொரு வலியைப் பாராய்; இவனொருத்தன் காணென்று காட்டினாள். எ - று.

40 1தொழீஇஇ

எ - து : காண்டற் றொழிலை யுடையவளே. எ - று.

இஃது ''அளபெடை மிகூஉ மிகரவிறுபெயர்''. (1)

(2)


(3)
காற்றுப்போல் வந்த 2கதழ்விடைக் காரியை
யூற்றுக் களத்தே யடங்கக்கொண் டட்டதன்
மேற்றோன்றி நின்ற பொதுவன் றகைகண்டை
யேற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டுச்

1. தொல். விளி. சூ. 8. இச்சூத்திர வுரையில் 'இவ்வளபெடைப் பெயர் விளியேற்கும்போது தன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரைபெற்று நிற்கும்; என்றது ழகர வீகாரத்தின் பின் இரண்டு இகரவுயிரும் மூன்று இகரவுயிரு மெழுதப்பட வேண்டுமென்பதை' என்றுகூறுவர், சே. கல். நச். இச்சொல்லுக்குத் தொழில் செய்கின்றவளே யெனப் பொருளும் எழுதுவர் நச்சினார்க்கினியரும் இ - வி. உரையாசிரியரும். இ - வி. சூ. 207. இச்சூத்திரத்தினுரையும் மேற்கோளும் எழுதுவோராலும் அவற்றை ஊன்றிப்பாராது அச்சிடுவோராலும் எளிதின் உண்மையறிய இயலாதவாறிருக்கின்றன. இச்சூத்திரவுரையில் ''தொழீஇ என்பது பெயர்; விளியு மஃதே யெனக்கொள்க. இஃதியல்பு. இயற்கைய வென்று பன்மை கூறிய வதனான், இவ்வளபெடை மூன்று மாத்திரையின் நிமிர்ந்து நிற்கு மென்பது கொள்ளப்படும். செயற்கையவென்றதனான் இவ்வளபெடைப்பெயர் எழுதும்வழி ஐந்தெழுத்திட்டும் எழுதுப'' என்பர் கல்லாடர். ஏனைய உரைகள் அச்சிடப் பட்டுள்ளன. ''தொழீஇஇ''கலி. 104 : 68. ''தொழீஇ யுடனுண்ணுர்'' சிறுபஞ்ச. 38. என இச்சொல் பிறவிடத்து வருதலும் காண்க.

2. ''ஏற்று மருப்பு மிலங்கிழையாகத் திபமருப்புங், கூற்று மருப்பெழுங் கோலந்தந் தாட்கொரு கோடிசுரும், பாற்று மருப்பொலி தாரண்ண லார்முன் னணிந்து விட்டார், காற்று நெருப்புங் கலந்த தென் னாவருங் காரிகைத்தே'' அம்பிகா. 257.

3. (அ) எருமைச்சாதியின் ஆண் எறெனப்படுமென்பதற்கு ''ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு'' என்பதுமேற்கோள்; தொல். மரபு. சூ. 39. பேர். சூ 38. நச். (ஆ) இந்நூற்பக்கம் 623 : 4-ஆங் குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்)1தொழிலீஇஇ, (என்பது முன்பதிப்பு,), 2கழுவிடை.