பக்கம் எண் :

872கலித்தொகை

மலையிலே மயிலுதிர்த்த பீலியும் விளங்குகின்ற [தனமல்ல;] (தாரல்ல) என் மனத்தாலே நன்றென்று கருதி யான் கட்டின பூந்தாரென்றும் உணர்வீராக; திருமால் மகனாகிய காமன் என் தலைமையை அழித்தலை விரும்பிக்கொடுக்கப்பட்டுத் தன்மெய்யிடத்தே அத்தன்மையவாகிய நன்மைகளெல்லாந் தோன்றிய வனப்பாலும் சாயலாலும் வடுவகிரின்றன்மையையுடைய கண்களாலும் என்னெஞ்சாகிய அரண் இடிந்துபோம்படி நடுவேவந்து என்னைக் கைகொள்ளும் ஒப்பிலாதவளுக்கு யான் வழிபட்டு உறைதலை உலகத்தார்க்குக் காட்டவேண்டிச் செல்லா நின்றேன்; இதனைக் கண்டு நீர் மனத்தே வெறுத்துக் குவிந்திராதேகொள்ளும்; யான் அத்தன்மையையுடையேன் ஒருவனென்றான். எ - று.

அன்னேனென்றது தான் இவ்வாறாதற்கு முன்செய்த தீவினையை நூல் ஆகுபெயர். தந்தென்பது ‘‘செலவினும் வரவினும்’’ என்னும் (1) சூத்திரப் பொதுவிதியான் ஈண்டுக் கொடுத்தலை உணர்த்திற்று. அனைய என்றது நெஞ்சறி சுட்டாய் நின்றது. வடிய என்றது வடுவகிரின் தன்மையையுடைய கண்களை உணர்த்திற்று. அடியிலே யுறைதல் வழிபாடென்னும் பொருடந்து நிற்றலின், அதனோடே ஒருத்திக்கு என்னும் நான்கனுருபு முடிந்தது.

13 என்னானும், (2) பாடெனிற் 1பாடவும் வல்லேன் சிறிதாங்கே

யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ

(3) வென்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக

நன்னுத லீத்தவிம் மா

எ - து: நீ ஒன்றுபாடென்று கூறுவீராயில் எப்படியால் எப்படி 2யாயினுஞ் சிறிது பாடவும் வல்லேன்; அம்மடன்மா மேலே இருந்து அஃது (4) இடவாய் வலவாய் பெயரும்படி நின்மெய்யை (5) அசைப்பாயென்பீராயின் அத்தொழிலையான் ஆளுதலையும் வல்லேன், இப்பொழுது என்னெஞ்சிடத்துக்காமநோயையான் ஆற்றும் மருந்தாக நன்னுதல் தந்த இக்குதிரையினைப் பாடுவேனோ என்றான். எ - று.

அவர் பாடென்னாமையின், மேல் தன்னை வருத்தினமையைக் கூறுகின்றான்.


1. தொல். கிளவி. சூ. 28.

2. இந்நூற்பக்கம் 858 : 3-ஆம் குறிப்புப் பார்க்க.

3. ‘‘உய்யா வருநோய்க் குயலாகு மைய, லுறீஇயா ளீத் விம்மா’’ கலி. 139 : 18 - 19.

4. ‘இடவாய் வலவாயாகிய இடத்தை’ புறம். 4 : 7. உரை.

5. ‘‘சங்கர னாவ ரெருக்கணந் தாடித் தனித்து நின்றே’’ என்று மடலேறுவார்க்கு ஆடுதலும் கூறப்படுதல் காண்க.

(பிரதிபேதம்)1பாடறும் வல்லேன், 2ஆகினும்.