10 | நீருள், (1) அடைமறை 1யாயிதழ்ப் (2) போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ விவன்மன்ற யானோவ வுள்ளங்கொண் டுள்ளா. மகனல்லான் பெற்ற மகனென் றகனகர் வாயில் வரையிறந்து போத்தந்து தாயர் | 15 | தெருவிற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் தத்தங் கலங்களுட் கையுறை யென்றிவற் கொத்தவை 2யாராய்ந் தணிந்தார் பிறன்பெண்டி ரீத்தவை 3கொள்வானா (3) மிஃதொத்தன் (4) சீத்தை 4செறுதக்கான் மன்ற பெரிது |
எ - து: நீரிடத்தே (5) இலையின்கீழே மறைந்துநின்ற அழகிய இதழை யுடைய தாமரைப்பூப்போலே எடுத்த பச்சைக்குடையின் நிழலிலே தோன்று கின்ற நின்பிள்ளையைக்கண்டு தாய்மார் யான் நோம்படி மனத்தைக்கைக் கொண்டு பின்னர் என்னை நினையாத நன்கு மதிக்கும் மகனல்லாதவன் பெற்ற மகன் அறுதியாக இவனென்று கருதி அகன்ற மனையினுடைய 5வாயிலினெல்லையைக் கைவிட்டுப்புறப்பட்டுத் தெருவிலேவந்து தடுப்ப அவரிடத்தே
1. இந்நூற்பக்கம் 26 :1 -ஆம் குறிப்புப் பார்க்க. 2. (அ) "திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை, யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித், தாதணிதாமரைப் போதுபிடித் தாங்குத், தாமு மவரு மோராங்கு விளங்க" மதுரை. 461 - 464. (ஆ) "போதவிழ் தாமரை யன்னநின் காதலம்புதல்வன்" ஐங். 424. (இ) "வழுவில் பொய்கையுண்மலரென வளர்ந்துமை யாடி" சீவக. 2756. (ஈ) "இவர்பெரி தளவி லாற்றலைப், பொருந்தின ராயினும் பூவின் மெல்லியர்" கம்ப. தாடகை. 17. எனவும் (உ) "பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே" ஐங். 97. (ஊ) "பதுமப் போதனாள்" கம்ப. மீட்சி. 79.எனவும் (எ) "புள்ளிதழ்த் தாமரைப் போதுறழு மூரனை" ஐந் - எழு. 50. எனவும்வருதல்காண்க. 3. "இஃதொத்தன்" இந்நூற்பக்கம் 386 : 3- ஆம் குறிப்புப்பார்க்க. 4. சீத்தை. கலி. 94 : 22 குறிப்புப்பார்க்க. 5. (அ) "தாமரை, தேமரு குடையிலை கவிப்பத் தேவியர், பூமரு மடந்தையர் போன்று தோன்றினார்" சூளா. சுயம்வர. 139.(ஆ) "பாசடை கவிகை யாக.......................பொய்கை சேய்க்கு வளம்பட வொழுகிற் றன்றே" கந்த. திருவவதார. 110. (பிரதிபேதம்)1ஆயிதட்போது, 2ஆய்பாய்ந்து, 3கொள்வானிஃதொத்தன், 4செறுத்தக்கான், 5வாசலின்.
|