யுடைய திண்ணியதேர் ஆரவாரித்த தெருவுகளெல்லாம் நின் (1)பரத்தைமை கூறிய பாட்டு உண்டாதற்குப் பொருந்தின நின் பொய்யாகிய பரத்தைமைக் குணத்தை யான் முற்காலமெல்லாம் மிகவுங் கேட்டும் அறிந்திருப்பேன்; அதுவேயன்றி நாடோறும் வரைந்து கொள்ளுங் 1கல்யாணமாகிய விழாவா லுண்டாகிய ஒப்பனையை என்னை ஒழிந்தவர்களுக்குக் 2காட்டுதற்கு நீ வந்து இப்படி வருவையென நெஞ்சிலே தெளிந்துவிட்டேன்; (2) எம்முடைய இல்லிலே புகுதலைச் செய்வாயாகிய நீ எமக்கு ஆராந்தன்மையையுடையை 3யென்றாள். எ - று. ஓரும், அசை. கேட்டுமென்னும் உம்மை, எச்சம், யாழ, அசை (3) கைப்படுத்துதல், ஈண்டுத் தெளிதலை உணர்த்திநின்றது. புகுதருவாயென்பது, (4)புகுதர்வாயெனத் திரிந்துநின்றது; உகரம் விகாரத்தாற் 4றொக்க தெனினுமாம். 9 | (5)தெரிகோதை யந்நல்லாய் 5தேறீயல் வேண்டும் பொருகரை வாய்சூழ்ந்த (6)பூமலி (7)வையை வருபுன லாடத் தவிர்ந்தேன் (8)பெரிதென்னைச் செய்யா மொழிவ தெவன் |
எ - து : அதுகேட்ட தலைவன், தெரிந்த மாலையினையும் அழகினையுமுடைய நல்லாய்! யான் செய்யாதனவற்றைப் பெரிதாக என்னைச் சொல்வது என்ன பயனையுடைத்து? தன்னிடத்தேசூழ்ந்த பூக்கள் மிக்க நீர்பொருகின்ற கரையையுடைய வையையாற்றில் வருகின்ற நீரையாடுதற்குத் தங்கினேன்; அதனை நின் னெஞ்சால் 6(9) தெளிதல்வேண்டுமென்றான். எ - று.
1. "மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க், காஞ்சி நீழற் குரவை யயரும்" அகம். 336 : 8 - 9. 2. "எம்மனை வாரனீ வந்தாங்கே மாறு" கலி. 89 : 2 - 3. 3. "கைப்படுதி" (சீவக. 1600.) என்பதற்கு, 'காண்பை' என்று பொருள் செய்திருத்தலும் இங்கே கருதற்பாலது, 4. "திரிதர் வாய்" பரி. 10 : 121. 5. "தெரிகோதை யந்நல்லார்" கலி. 88 : 18. 6. "வையை யென்ற பொய்யாக் குலக்கொடி...........புண்ணிய நறு மலராடை போர்த்து, ....................புனல்யா றன்றிது பூம்புனல் யாறென" சிலப். 13 ; 170 - 174. 7. "வையை வருபுன லாட லினிது கொல்" தொல். மெய்ப்பாட். சூ. 11. இளம். மேற்கோள். 8. கலி. 68 : 32 - 33. 9. 'ஓஒதல் வேண்டும்' (குறள். 653) என்பதற்கு, தவிர்க வென்று பொருளெழுதி யிருப்பதும், 'காத்தல் வேண்டும்' (சீவக. 201.) (பிரதிபேதம்)1கல்லியாணமாகிய, 2காட்டுதற்குச்சிவந்திப்படியையென, 3என்றாள் கேட்டும், 4தொக்கது, தெரி, 5தெரீஇயல்வேண்டும், 6தெளிதலைவேண்டும்.
|