முகப்பு அரும்பத முதலியவற்றின் அகராதிதொடக்கம்
1 அஃறிணைப் பெயர் அன்மொழியாய் உயர்திணைக்கண்வந்து விளியேற்கு மிடத்து உயர் திணைப் பெயராமென்பது, 309
2 அஃறிணைப்பெயர் ஆகுபெயராய்உயர் திணைக்கண்வந்து விளியேற்கு மிடத்து உயர்திணைப்பெயராமென்பது 309
3 அக்கால் - அக்காலத்தே 933
4 அக்குச்சாரியை 395
5 அக்குளுக்காட்டுதல்- கக்க முதலிய உறுப்பில் தீண்டிக் கூச்சமுண்டாக்குதல் 571
6 அக்குளுத்து - அக்குளுக் காட்டுதலையுடைத்து 570
7 அகடாரப்புல்லி முயங்குதல் 574
8 அகடு - உள்வாய் 574
9 அகத்த - உள்ளிடத்தன 136
10 அகத்திடாது புறத்தேதள்ளல் 180
11 அகத்திடுதல்
12 அகத்தியனார் குறுங்கலி கூறவில்லை யென்பது செவிவழிக் கேள்விபோலும் 610
13 அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் குறுங் கலி கூறவில்லையென்பது 610
14 அகத்து (ஏழனுருபு)
15 அகத்துழிஞை, நொச்சி யென்றும் கூறப்படுமென்பது 426
16 அகத்துழிஞையான் 426
17 அகநிலைக்கொச்சகம் 755
18 அகநிலை யாகிய கட்டளை யொத்தாழிசை 23
19 அகநிலை யொத்தாழிசைக்கண் வரும் இடைநிலைப்பாட்டிற் பொருளொவ்வாது வருதலும் சிறுபான்மை யுண்டென்பது 39
20 அகப்படுத்தல் - அகப்படுத்துதல் 351
21 அகப்படுதல்
22 அகப்படுப்ப - அகப்படுத்திக்கொள்ள 131
23 அகப்படுப்பேன் - அகப்படுத்திக்கொள்வேன் 882
24 அகப்பாட்டு - அகநானூற்றுச் செய்யுள் 751
25 அகப்புறக்கைக்கிளை தலைமைப்பாடில் லாதவர்க்கு உரித்தென்பது 381
26 அகப்புறம் 406
27 அகப்பொருளின் கண்வந்த தரவிணைக் கொச்சகம் 334
28 அகம் - ஆகம் 170
29 அகம் - உலகம் 910
30 அகம் - மலை 231
31 அகமலர்ச்சி 756
32 அகரச்சுட்டு, தனித்து நின்று பொருளுணர்த்த லாற்றாதென்னும் கொள்கை 539
33 அகரச்சுட்டு, தனித்து நின்றும் பொருளுணர்த்துதல்: ‘அவ்வெதிர் அதனெதிர்’ 538
34 அகரவீற்றுத் தொழிற்பெயர் 424
35 அகரவீற்றுப் பலவறிசொல் படுத்த லோசையால் பெயராய் நிற்றல் 294
36 அகல - நீங்குகையினால் 932
37 அகல - நீங்கும் படி
38 அகலம் - சூத்திரத்துப் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவிடையுள்ளுறுத்துரைக்கும் உரை, பரசமயத்தார் கூறும் கடாவிற்கு விடையாகக் கூறும்விகற்பம் 565
39 அகலம் - மார்பு
40 அகலம் புகுதல் - மார்பிடத்தே முயங்குதல் 552
41 அகலறை - அகன்றபாறை
42 அகலாங்கண் - அகன்றஊரிடம் 896
43 அகலுதல் - இட்டுப்பிரிதலைச் செய்தல் 322
44 அகலுதல் - நீங்குதல்
45 அகவா - அழைத்தனவில்லை 818
46 அகவினம் பாடுவாந் தோழி 230
47 அகவுதல், ‘அகவல்’ போல நின்றது 231
48 அகவுதல் அழைத்தல்
49 அகவுவம் - பாடுவேம் 250
50 அகற்சியதருமை
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்